raja rani 2 serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் ரூமில் சந்தியா சரவணன் சிவகாமி எடுக்க போகும் முடிவு என்ன என்பது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அத்தை பேசியதெல்லாம் பார்த்தா அவங்களுக்கு நான் போலீஸ் ஆகவில்லை சுத்தமாக விருப்பமில்லை. வேண்டாம் என்று தான் சொல்லப் போகிறார்கள் என நினைப்பதாக சந்தியா கூறுகிறார். அம்மா பேசியதெல்லாம் நம்ம மேல இருக்க அக்கறையில் பேசியதுதான் என்னுடைய சந்தோஷம்தான் அவங்களுடைய சந்தோஷம் கண்டிப்பாக நல்ல முடிவை தான் சொல்லுவாங்க என சரவணன் கூறுகிறார்.
இந்த பக்கம் செந்தில் அர்ச்சனாவும் அம்மா சொல்ல போகும் முடிவு குறித்து பேசிக்கொண்டிருக்க அர்ச்சனா கண்டிப்பா அத்தை வேணாம்னு தான் சொல்லுவாங்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நான் எது நடக்க கூடாது என்று நினைத்தேன் அது நடக்கல என கூறுகிறார்.
ரூமில் ரவி சிவகாமி இடம் சந்தியா இந்த குடும்பத்துக்காக எவ்வளவு செய்திருக்கிறார் உன்ன கெட்ட பேரில் இருந்து காப்பாற்றி இருக்கா. நம்ம பொண்ணு பார்வதி உயிர காப்பாற்றி இருக்கா. இப்படியாவா நம்ம குடும்பத்துக்கு நிறைய நல்ல விஷயங்கள் பண்ணி இருக்கா இந்த வீட்டுக்கு மருமகளா வந்ததால அவ லட்சியத்தை மறந்துடணும்னு சொல்றது எந்த விதத்தில் நியாயம்? பிரச்சனை எங்க யார்கிட்டயும் இல்ல உனக்குள்ள இருக்க கர்ப்பம் தான் என ரவி சொல்கிறார். பேசுவதெல்லாம் பேசிட்டிங்களா என்னுடைய பதிலை நாளைக்கு சொல்கிறேன் என சிவகாமி அங்கிருந்து எழுந்து சென்று விடுகிறார்.
மறுநாள் காலையில் சிவகாமி பூஜை அறையில் பூஜை செய்து கொண்டிருக்க எல்லோரும் வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமாக எழுந்து வந்து சிவகாமி முடிவுக்காக நிற்கின்றனர். பிறகு சிவகாமி பூஜையறையில் இருந்து ஹால் டிக்கெட் எடுத்து வந்து சந்தியா போலீஸ் ஆவதில் எனக்கு எந்த தடையும் இல்லை ஆனால் நான் கேட்ட கேள்விகள் எல்லாம் அப்படியே தான் இருக்கிறது அதற்கான பதிலை சந்தியா தேடி ஓட வேண்டும் என சொல்லி ஹால் டிக்கெட்டை கொடுக்கிறார்.
ஹால் டிக்கெட் வாங்கிய சந்தியா மகிழ்ச்சியில் சிவகாமி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கண்கலங்குகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…
‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…