அர்ச்சனாவை சந்தியாவிடம் போட்டுக்கொடுத்த பாஸ்கரின் பெற்றோர்.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சீரியலின் இன்றைய எபிசோட்டில் பார்வதி திருமணத்திற்காக குடும்பத்தார் அனைவரும் மண்டபத்திற்கு சென்று கொண்டிருக்கும்போது விக்கி பார்வதிக்கு போன் செய்து இன்னைக்கு நைட்டு மண்டபத்துல தானே இருப்பீங்க நான் உனக்கு போன் பண்ணுவேன் நீ கிளம்பி வரணும் என மிரட்டுகிறார். இல்லையென்றால் மண்டபம் நாம் எடுத்துக் கொண்ட போட்டோக்களை தான் இருக்கும் என சொல்கிறார்.

பிறகு எல்லோரும் மண்டபத்துக்கு வந்ததும் பார்வதியின் முகம் சோகமாக இருப்பதை பார்த்து சந்தியா என்னாச்சு என கேட்க ஒன்றும் இல்லை எனக் கூறி சமாளித்து விடுகிறார். சிவகாமி கொஞ்சம் சிரிச்ச முகத்தோட இரு இல்லன்னா பார்க்குறவங்க தப்பா நினைப்பாங்க என கூறுகிறார். அதன்பிறகு பார்வதிக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் செல்கின்றனர். நம்ம மேல சந்தேகம் வராம இருக்க எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்யணும் என அர்ச்சனா ஆரத்தி எடுக்கச் செல்ல சந்தியாவை எடுக்க சொல்கிறார் சிவகாமி.

ரூமுக்கு போனாள் பார்வதி விக்கி மிரட்டுவதை நினைத்து மிகவும் வருத்தப் படுகிறார். அப்பா அம்மா ரொம்ப கஷ்டப்பட்டு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணி இருக்காங்க ஆனா என்ன நடக்கப் போகுதுன்னு தெரியல, எல்லாம் நல்லபடியா நடக்கணும் என புலம்புகிறார்.

பிறகு பாஸ்கர் குடும்பம் வந்ததும் அவர்களுக்கும் சந்தியாவை ஆரத்தி எடுக்கச் சொல்லி உள்ளே வரவேற்கின்றனர். அதன் பின்னர் பாஸ்கர் அவருடைய அம்மா மற்றும் உறவினர்கள் பார்வதியை சென்று சந்திக்கின்றனர். பிறகு பாஸ்கர் பார்வதியிடம் தனியாக பேசும் போதே எனக்கு தலை வலிக்கிறது நான் கொஞ்ச நேரம் தனியாக இருக்கணும் கூறி அவரை வெளியே அனுப்பிவிடுகிறார் பார்வதி. இதுக்கு என்ன ஆச்சு இப்படி செய்ய மாட்டாள் என யோசிக்கிறார் பாஸ்கர்.

இந்த பக்கம் பார்வதியின் பெற்றோர் சந்தியா வேலைகளை இழுத்துபோட்டு செய்து கொண்டிருக்கும் போது அவரை சந்தித்து உன்னிடம் ஒரு விஷயம் சொல்லணும். உன்னை பார்த்து தான் உங்க வீட்டில் பொண்ணு எடுக்கணும்னு பார்வதியை பொண்ணு கேட்டு வந்தோம். என்ன மாதிரி உங்க வீட்டில எல்லோரும் நல்லவங்க கிடையாது என கூற சந்தியா என்ன ஆச்சு என கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு ஒரு நாள் எங்க வீட்டுக்கு அர்ச்சனா அவங்க அப்பா அம்மாவைக் கூட்டிக் கொண்டு வந்து இந்த கல்யாணத்தை நிறுத்தி விட்டு அத தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டதாக கூறுகின்றனர். பேசிக் கொண்டிருப்பதை அர்ச்சனா கேட்டு அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Raja Rani 2 Serial Episode Update 29.04.22
jothika lakshu

Recent Posts

Thaai Kizhavi – Official Trailer

Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…

45 minutes ago

தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன்

தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…

6 hours ago

​திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா​

​திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா​ ராஷ்மி​கா மந்தனா 'கீத கோவிந்​தம், ‘டியர் காம்​ரேட்’ படங்​களில்…

6 hours ago

சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி

சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம்…

6 hours ago

ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல்

ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல் பாலிவுட் நடிகர் ரன்​வீர் சிங்​குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்​பலைச்…

7 hours ago

விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு?

விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு? கார்த்தி நடிக்கவிருக்கும் 'கைதி-2' படமும் 'டில்லி' கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள்…

7 hours ago