Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சந்தியாவை தலையில் கட்டையால் அடித்த செல்வம்.. கண்ணம்மா மற்றும் பார்வதியை கடத்திய செல்வம்.. இன்றைய பாரதிகண்ணம்மா ராஜா ராணி 2 எபிசோட்

raja rani 2 serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களான பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 ஆகிய சீரியல்கள் மெகா சங்கமம் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வருகின்றன. இன்றைய எபிசோடில் சாமியார் மூன்று பெண்களை ஈரத் துணியோடு நடு இரவில் ஊரைச் சுற்றி வர சொன்னதில் ஏதோ திட்டம் இருக்கிறது என சந்தேகப்படுகின்றனர். உங்களுக்கு துணையாக வருவோம் என சரவணன் பாரதி மற்றும் பாஸ்கர் மூவரும் சொல்கின்றனர்.

ஆனால் ஊர் பொதுமக்கள் இவர்கள் மூவரும் செல்லக்கூடாது பெண்கள் மூவர் மட்டும் தான் போக வேண்டும் என சொல்லி தடுத்து நிறுத்துகின்றனர். இருப்பினும் இவர்கள் மூவரும் குறுக்கு வழியில் அவர்களை ஒரு பக்கம் தேடிச் செல்ல இந்த பக்கம் கார் வந்த ஒரு கும்பல் மூவரையும் மரித்து சண்டையிடுகிறது. ஒரு கட்டத்தில் செல்வம் சந்தியாவை தலையில் கட்டையால் அடித்து தாக்க அவர் கீழே விழுகிறார்.

அதன் பிறகு செல்வம் கண்ணம்மா மற்றும் பார்வதி காரில் ஏற்றி கடத்திச் செல்கிறார். அதன் பிறகு சந்தியாவின் ஹாஸ்பிடல் அழைத்துச் சென்று சரவணன் பாரதி மற்றும் பாஸ்கர் மூவரும் அனுமதித்து சாமியாரிடம் வந்து சண்டையிருக்கின்றனர். உங்க வீட்டு பெண்களை கடத்தியது சாமியார் இல்லை செல்வம் தான் என வீடியோ ஆதாரத்தை காட்டுகிறார்.

பிறகு இவர்கள் மூவரும் அங்கிருந்து கிளம்பி விட அதன் பிறகு சாமியார் செல்வம் இவர்களை கடத்தி வைத்து இடத்திற்கு சென்று உங்களை கடத்த திட்டம் போட்டு கொடுத்தது நான் தான் என்று கூறுகிறார். அதன் பிறகு இந்த பார்வதி பார்த்தால் உனக்கு என்ன தோணுது என சாமியார் கேட்க அப்படியே கொளுத்தனும்னு தோணுது என கூறுகிறார். அப்படியே பண்ணிட்டு என சொல்ல அதன் பிறகு செல்வம் பார்வதியை ஒரு ரூமுக்கு அழைத்துச் சென்று கொளுத்துவது போல காட்டப்படுகிறது.

இந்த பக்கம் ஹேமா மற்றும் லட்சுமி என இருவரும் கண்ணம்மாவுக்காக கதறி கதறி சௌந்தர்யா அவர்களை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். டாக்டர் அப்பா அம்மாவ எப்படியாவது கண்டுபிடித்து கூட்டிட்டு வந்துடுங்க என லட்சுமி அழுகிறார். அம்மா பாசத்துக்காக எங்கன நான் இப்பதான் சமையல் அம்மாவை அம்மாவா நினைக்க ஆரம்பிச்சேன் அதனால என்னவோ அதுக்குள்ள அவங்களுக்கு இப்படி ஆயிடுச்சு என ஹேமா ஒரு பக்கம் அழுகிறாள். இத்துடன் இன்றைய ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா மெகா சங்கமம் எபிசோட் அப்டேட் முடிவடைந்தது.

raja rani 2 serial episode update
raja rani 2 serial episode update