Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சரவணன் சந்தியாவுக்கு முதலிரவு ஏற்பாடு செய்யும் சிவகாமி.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

Raja Rani 2 Serial Episode Update 21.04.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் அர்ச்சனாவும் சிவகாமியின் கணவரும் வெளியில் திண்ணையில் அமர்ந்து கொண்டு கேட்டபோது பால்காரி அம்மா வந்து பால் கொடுக்கிறார். இனி தினமும் ஒரு லிட்டர் பால் எக்ஸ்ட்ரா வேண்டும் என சிவகாமி சொல்லி அனுப்புகிறார். இவ்வளவு பால் எதுக்கு என அர்ச்சனா மற்றும் சிவகாமியின் கணவர் யோசிக்கின்றனர்.

அதன் பிறகு கொஞ்ச நேரத்தில் பூக்காரம்மா வந்து வழக்கம்போல் கொடுக்கும் பூ கொடுக்க மேலும் 4 முழம் மல்லிகைப்பூ வேண்டும் என கேட்டு வாங்குகிறார். என்ன விஷயம் ஏன் இவ்வளவு பொய் என சிவகாமியின் கணவர் கேட்க அதெல்லாம் என் வேலை நீங்க கொஞ்சம் அமைதியா வேலையை பாருங்க என கூறி விடுகிறார். அர்ச்சனாவுக்கு சந்தேகம் வருகிறது.

அதன்பிறகு சிவகாமி சந்தியா வந்ததும் அவரை குளிக்க சொல்கிறார் கட்டில் மேல் ஒரு புடவை வைத்திருக்கிறேன் அதை எடுத்து கட்டிக் கொள் எனச் சொல்கிறார். பிறகு உனக்கு ஒரு கிப்ட் வாங்கி இருக்கேன் என ராதா கிருஷ்ணன் சிலையை கொடுக்கிறார். பிறகு தலை நிறைய மல்லிப்பூ வைத்து விடுகிறார்.

சாப்பிடும்போது சரவணன் சந்தியா மேக்கப்பில் தலை நிறைய மல்லிப்பூ வைத்திருப்பதைப் பார்த்து அசந்து போகிறாள். வச்ச கண் வாங்காமல் சந்தியாவை பார்த்துக்கொண்டிருக்க பார்வதி கிண்டலடிக்கிறார். பிறகு இருவரும் ரூமுக்கு சென்று பார்த்தபோது ஒரு நூலில் கட்டிலில் பூவெல்லாம் தூவி முதலிரவுக்கு அலங்காரம் செய்து வைத்திருக்கிறார் சிவகாமி.

பின்னாடியே மயிலு கையில் பாலை எடுத்து வந்து கொடுத்து இதை மிச்சம் வைக்காமல் குடித்துவிட வேண்டும் என அம்மா சொன்னாங்க என கொடுத்துவிட்டு செல்கிறார். பிறகு சந்தியா சரவணன் இடையே அப்படியே ரொமான்ஸ் போக ஒரே ஒரு பார்வையிலே பாடல் ஒலிக்கிறது. இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Raja Rani 2 Serial Episode Update 21.04.22
Raja Rani 2 Serial Episode Update 21.04.22