Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மார்க்கெட்டில் ரவுடிகளை அடித்து நொறுக்கிய சந்தியா.. அர்ச்சனா போட்ட திட்டம்.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

Raja Rani 2 Serial Episode Update 21.03.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் மார்க்கெட்டில் காலேஜ் படிக்கும் பெண்ணிடம் 2 ரவுடிகள் சில்மிஷம் செய்ய அவர்களை பிடித்து சந்தியா அடித்து நொறுக்குகிறார் சந்தியா.

மார்க்கெட்டில் ஒரே சண்டை என அனைவரும் ஓட கடைக்கு வந்த செல்வம் சந்தியா அண்ணி என சொல்ல சரவணனும் பதறி அடித்து ஓடுகிறார். அங்கு சந்தியா ரவுடிகளை வெளுத்து வாங்குவதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். அங்கிருந்தவர்கள் இதைக்கொண்டு இந்த பொண்ணுக்கு துணிச்சல் அதிகம், போலீசாக வேண்டும் என சொல்ல அதைக் கேட்டு சரவணன் மகிழ்ச்சி அடைகிறார். அவங்க என் மனைவி சந்தியா என சொல்லி பெருமைப் படுகிறார்.

பிறகு அதே மார்க்கெட்டில் உங்களுக்குள் இருக்கும் போலீஸ் கனவு உங்களுக்கு தெரியாமல் வெளியே வருகிறது என சரவணன் சொல்கிறார். நீங்க ஏன் போலீஸ் கனவை மறந்துட்டேனு பொய் சொல்றீங்க என கேட்க அந்தப் பேச்சை இதோட விடுங்க பேச வேண்டிய அளவுக்கு பேசியாச்சு என சந்தியா கூறுகிறார். அப்போது ஒரு பெண்மணி வந்து உன்னை மாதிரி பெண்கள் துணிச்சலா இருக்கணும். நீ போலீசாக வேண்டும் என கூறுகிறார்.

வீட்டுக்கு வந்த இருவரையும் பார்த்த சிவகாமி என்ன ஜோடியா வரீங்க என கேட்க மார்க்கெட்டுக்குப் போய்விட்டு வரோம் என கூறுகின்றனர். மார்க்கத்தில் ஒரே சண்டை சந்தியா தான் என சரவணன் விஷயத்தைச் சொல்ல ஆரம்பிக்க சரவணனின் அப்பா உள்ளே புகுந்து ஏதோ ஒரு ரவுடி பசங்க காலேஜ் பொண்ணு கிட்ட வம்பு பண்ணி இருக்காங்க போலீஸ் புடிச்சுட்டு போயிட்டாங்க எனச் சொல்கிறார்.

உடனே அர்ச்சனா மாமா பாதி உண்மையை மறைக்கிறார். போட்டு கொடுக்கலாம் என முடிவு செய்து மாட்டிவிட முயற்சிக்கிறார். ஆனால் செந்தில் அர்ச்சனாவின் வாயை அடைத்து விடுகிறார். பிறகு சிவகாமி உள்ளே சென்று விட இப்போதைக்கு விஷயம் சிவகாமிக்கு தெரிய வேண்டாம் என சரவணனின் அப்பா சொல்லி விடுகிறார்.

பிறகு செந்தில், பார்வதி என அனைவரும் சந்தியாவை பாராட்டுகின்றனர். ரூமுக்கு போன அர்ச்சனா சந்தியாவை பற்றி பேசத் தொடங்க கடுப்பான சந்தியா இதைப் பற்றி அம்மா கிட்ட ஏதாவது போட்டுக் கொடுத்தா நீ இந்த வீட்டிலேயே இருக்க முடியாது என கூறுகிறார். யார் இந்த விஷயம் அம்மாகிட்டே சொன்னாலும் அந்த பழி உன் மேல தான் வரும் என கூறுகிறார்.

இந்த பக்கம் சந்தியா ரூமுக்குள் இருக்க மீண்டும் சரவணன் போலீஸ் கனவை பற்றி பேசத் தொடங்க சந்தியா அதைப் பற்றி கேட்க வேண்டாம், என்னால எந்த பிரச்சனையும் வரக்கூடாது.. எல்லோரும் சந்தோஷமாக இருக்கணும்னு நினைக்கிறேன் என கூறுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.

Raja Rani 2 Serial Episode Update 21.03.22
Raja Rani 2 Serial Episode Update 21.03.22