raja rani 2 serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சல்மா சாமியாருக்கு தொடர்ந்து போன் போட்டு கொண்டு இருக்க சாமியார் வேடத்தில் இருக்கும் கோவிந்தன் போனை எடுக்காமல் இருக்கிறார். பிறகு சந்தியா சல்மாவுக்கு போன் போட்டு இப்போ வீடியோ கால் வரலைன்னா பேமெண்ட் கிடைக்காது என மிரட்டு என கூறுகிறார். உடனே சாமியார் நான் தியானம் பண்ணியாக வேண்டும் தியானம் பண்ண வேண்டிய நேரம் வந்துவிட்டது என சொல்லி ஒரு ரூமுக்குள் சென்று கெட்டப்பை மாற்றி சல்மாவிடம் பேசுகிறார்.
இதை சந்தியாவும் சரவணனும் ஒரு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து அதிர்ச்சடைகின்றனர். சரவணன் இந்த விஷயத்தை இப்பவே எல்லாரிடமும் சொல்லி இந்த சாமியாரின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என முடிவு செய்ய சந்தியா அவசரப்படாதீங்க என தடுத்து நிறுத்துகிறார். பிறகு வீடியோ கால் பேசி முடித்துவிட்டு சாமியார் வெளியே வந்ததும் பூஜைக்கு நேரமாகிறது என சொல்லி கிளம்பி விடுகிறார். மேலும் செல்லும் போது நாளை பூஜைக்கு முதல் கல் நீதான் எடுத்துக் கொடுக்க வேண்டும் என சிவகாமியை குடும்பத்தோடு வர சொல்லி கூறுகிறார்.
அதன் பிறகு சரவணன் என்ன செய்வது என கேட்க சந்தியா சல்மாவுக்கு போன் போட்டு நான் சொல்வது போல செய் என சில விஷயங்களை கூறுகிறார். ஆதாரத்துக்காக சில தகவல்களையும் அவரிடம் இருந்து பெறுகிறார். வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் கோவிலுக்கு முதல் கல் எடுத்துக் கொடுப்பது பெரிய பாக்கியம் என பேசி சந்தோஷப்பட்டு கொண்டிருக்க சரவணன் விஷயத்தை சொல்லிவிடலாமா எனக் கேட்க சந்தியா வேண்டாம் என கூறுகிறார்.
பிறகு இரவு நேரத்தில் சந்தியா வெளிய அமர்ந்து யோசனைகள் இருக்க சரவணன் அங்கே வந்து வீட்டில் எல்லோரும் பூஜைக்கு இப்பவே தயாராகிக் கொண்டிருக்காங்க என்ன பண்ணுவது என சொல்ல சந்தியா எல்லாம் பிளானும் போட்டாச்சு என கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…