Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மருத்துவமனையில் இருந்து வந்த போன் கால்.. பதறிப்போன குடும்பத்தினர்.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

Raja Rani 2 Serial Episode Update 19.05.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சந்தியாவும் சரவணனும் அரசு மருத்துவமனைக்குச் செல்ல அங்கே சரவணன் பதற்றத்தோடு இருக்க சந்தியா கான்ஸ்டபிளுக்கு போன் செய்து நாங்கள் வந்துவிட்டோம் என கூறுகிறார். பிறகு அவர் இருவரையும் மார்ச்சுரிக்கு வர சொல்ல சந்தியா அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு அவர் சரவணனை அழைத்துக் கொண்டு போக இன்னும் பதறிப்போன சரவணன் பார்வதி இங்க இருக்கமாட்டார் லூசு மாதிரி பண்ணாதீங்க வாங்க போகலாம் என அங்கிருந்து கிளம்ப சந்தியா கொஞ்சம் பொறுமையா இருங்க நம்ம பார்வதிக்கு ஒன்னும் ஆகாது என கூறுகிறார். பிறகு போலீஸ் தண்டவாளத்தில் ஒரு பெண்ணின் உடல் கிடந்தது அது உங்களுடைய தங்கச்சியா என பார்த்து சொல்லுங்க என சொல்ல என்ன சார் நீங்க இப்படியெல்லாம் பேசறீங்க அது என்னுடைய தங்கச்சியா இருக்காது என கூறுகிறார். இது வெறும் பார்மாலிட்டி என சொல்ல நான் பார்க்க மாட்டேன் என சரவணன் உறுதியாக கூறி விடுகிறார்.

பிறகு சந்தியா சரி நான் பார்த்துவிட்டு வருகிறேன் என உள்ளே சென்று பார்த்து விட்டு ஓடிவந்து அது நபர் பார்வதி இல்லை என சந்தோஷமாக கூறுகிறார். அதன்பிறகு இருவரும் அங்கிருந்து வீட்டிற்கு கிளம்ப இங்கே பாஸ்கர் ரொம்ப பதற்றத்தோடு இருக்கிறார். ஆதி திரும்பத் திரும்ப போன் செய்ய சரவணன் போனை எடுக்கவில்லை இதனால் இன்னும் பதற்றம் அதிகமாகிவிட்டது.

பிறகு ஒரு வழியாக சரவணன் போனை எடுத்து அது நம்ப பார்வதி இல்லை என சொல்ல வீட்டில் உள்ளவர்கள் நிம்மதி அடைகின்றனர். அதன்பிறகு பக்கத்து வீட்டு பெண்மணி கவிதா என்பவர் வீட்டிற்கு வர அனைவரும் கண்ணைத் துடைத்துக் கொண்டே அவரிடம் நல்லபடியாக பேசி சமாளிக்கின்றனர். பார்வதியின் எங்கே என கேட்க பாஸ்கர் அவ உடம்பு முடியலன்னு தூங்கிட்டு இருக்கா என கூறுகிறார்.

அதன்பிறகு கவிதா கோவில் அபிஷேகம் குறித்து ஞாபகப்படுத்த அதுதான் தெய்வ குத்தம் ஆகி விட்டது என நினைத்துக் கொண்டு உடனே அபிஷேகம் செய்ய வேண்டும் என முடிவு செய்கிறார். பின்னர் சந்தியா சரவணன் வந்தது அவர்களிடம் இந்த விஷயம் குறித்து சொல்ல சந்தியா உங்களுக்கு அது தான் நம்பிக்கை தரும் நான் உடனே செய்யலாம் ஒன்னும் பிரச்சனை இல்லை என கூறுகிறார். சரவணனும் நாளைக்கு கோவிலுக்கு போகலாம் என கூறுகிறார்.

பாஸ்கர் எல்லோரும் பார்வதி எங்கே என கேட்பாங்க என்ன சொல்லி சமாளிக்கிறது என கதறி அழுகிறார். எதையாவது சொல்லி சமாளிக்கலாம் நீங்க வருத்தப்படாதீங்க என அவரை சமாதானம் செய்கின்றனர். ரூமுக்குள் சந்தியா பார்வதியின் கர்ச்சீப்பை கையில் வைத்துக்கொண்டு சிந்தனையில் இருக்க அப்போது சரவணன் வந்து சந்தியாவிடம் பிரசவ எனக்கு ஒரு சந்தேகம் வந்து இருக்கு என கூறுகிறார்.

சரவணன் என்னவென்று கேட்க இது பார்வதியோட கர்சீப், இது எங்க இருந்து எடுத்தேன் தெரியுமா? நம்ப கடையிலிருந்து என சொல்ல சரவணன் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Raja Rani 2 Serial Episode Update 19.05.22
Raja Rani 2 Serial Episode Update 19.05.22