Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சந்தியாவிடம் சிக்கிய அர்ச்சனா.. குடும்பத்தாருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

raja rani 2 serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சந்தியா கையில் நியூஸ் பேப்பரை எடுத்துக் கொண்டு சென்று அர்ச்சனாவிடம் இந்த மருந்தை சாப்பிடுறியா என கேட்க அவர் எதுக்கு இதையெல்லாம் கேட்கிறேன் உனக்கு பதில் சொல்லணும்னு எனக்கு எந்த அவசியமும் கிடையாது என வெளியே வர அதற்கு குடும்பத்தார் எல்லோரும் சூழ்ந்து கொள்கின்றனர். அர்ச்சனா சாமியாரிடம் மருந்து வாங்கி சாப்பிடும் விஷயத்தை சொல்ல எல்லோரும் அர்ச்சனாவை ரவுண்டு கட்டி திட்ட தொடங்குகின்றனர்.

இந்த நேரத்தில் பேங்கில் இருந்து வந்து ஏடிஎம்மில் பணத்தை எடுத்தவர் ஒரே ஆள் தான் அது இவர் தான் என அர்ச்சனாவின் புகைப்படத்தை காட்ட அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். அதன் பிறகு சந்தியா அவர்களிடம் கம்ப்ளைன்ட் எதுவும் கொடுக்க வேண்டாம் நாங்களே பேசி தீர்த்துக் கொள்கிறோம் என சொல்லி அனுப்பி வைக்கிறார்.

அதன் பிறகு எல்லோரும் இப்படி வீட்டிலேயே பணத்தை திருடியது தப்பில்லையா என கேட்க அர்ச்சனா தப்பு தான் ஆனால் அது எதற்காக செய்தேன், உங்களுக்கு ஆண் குழந்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் செய்தேன் என கூறுகிறார். சந்தியா செய்த தப்பு எல்லாம் மன்னித்து மாதிரி இதையும் மன்னிச்சுடுங்க. இவளுக்கு பணத்தை எடுத்தது பிரச்சனை இல்லை இந்த வீட்டில எதையாவது பிரச்சினையை கிளப்ப வேண்டும் என்று தான் இப்படி பேசிக்கிட்டு இருக்கா என சொல்ல சிவகாமி இந்த பேச்சை இதோட விடுங்க இனிமே என்கிட்ட சொல்லாம எதையும் செய்யக்கூடாது என அர்ச்சனாவை எச்சரித்து அனுப்புகிறார்.

பிறகு செந்தில் அர்ச்சனாவை அழைத்துக் கொண்டு தனியாக திட்ட அவர் இந்த மாதிரி எல்லாம் பேசிட்டு இருந்தா நான் கிளம்பி எங்க அம்மா வீட்டுக்கு போயிட்டே இருப்பேன் குழந்தையை கண்ணில் காட்ட மாட்டேன் என மிரட்ட செந்திலும் அமைதியாகி விடுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

raja rani 2 serial episode update
raja rani 2 serial episode update