பார்வதியால் பதறிப் போன குடும்பம்.. அர்ச்சனா செய்த செயல்.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கடைக்கு போன பார்வதி செல்வத்தின் உண்மை முகம் தெரிந்தவுடன் பார்வதியை கட்டிப் போட்டு வாய் பேச முடியாதபடி செய்கிறார் செல்வம். இந்தப் பக்கம் அர்ச்சனா தன்னுடைய தங்கச்சிக்கு போன் செய்ய அவர் அர்ச்சனாவின் மீது இருக்கும் கோபத்தால் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து அர்ச்சனா போன் எடுக்க பின்னர் போனை எடுத்த அவருடைய தங்கச்சி பிரியா எதுக்கு போன் பண்ணிக்கிட்டு இருக்க எனது திட்ட பாஸ்கரை கட்டி வைக்கிறேன் என்று சொல்லி ஏமாத்திட்ட என்று கூறுகிறார்.

பிறகு அது மிஸ் ஆகிடுச்சு நான் என்ன பண்ண முடியும், உனக்கு வெளிநாடு போக ஏற்பாடு பண்ணியிருக்கேன் என கூறுகிறார். வெளிநாட்டு மாப்பிள்ளை பார்த்து விட்டேன் சாயங்காலம் நீ ரெடியாயிட்டு நம்ப கடை பக்கம் வந்துடு என கூறுகிறார். வெளிநாட்டு மாப்பிள்ளை என்றதும் குஷி ஆகி பிரியாவும் சரி என்று கூறுகிறார். பிறகு பாஸ்கர் பார்வதியைத் தேடி சரவணன் கடைக்கு வர செல்வம் பார்வதி வரவில்லை என கூறுகிறார். பார்வதி கடைக்கு தான் வருவதாக சொன்னார் உண்மையாகவே வரவில்லையா என பாஸ்கர் கேட்க இல்லை என சொல்லி சமாளிக்கிறார் செல்வம். ஒருவேளை வீட்டுக்கு போயிட்டாளா? இல்ல ஆட்டோவுக்கு போயிட்டாளா? என தெரியாமல் பாஸ்கர் ஆட்டோ அருகே சென்று பார்க்க பார்வதி இல்லை. வீட்டுக்குப் போயிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு நேராக வீட்டிற்குச் செல்கிறார்.

பாஸ்கர் வருவதைப் பார்த்ததும் வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் வெளியே நிற்கச் சொல்லி ஆரத்தி எடுக்க தயாராகின்றனர். பிறகு பார்வதி எங்கே எனக் கேட்க பார்வதி இங்கேயும் வரலையா என நடந்த விஷயத்தை கூறுகிறார். உடனே வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் பதறி பார்வதியைத் தேடி செல்கின்றனர். சரவணன் நேராக கடைக்குச் சென்று செல்வத்தையும் சட்டையை பிடித்து பார்வதி கடைக்கு வரலையா உண்மையை சொல்லு என கேட்கிறார். இல்ல பார்வதி வரல பாஸ்கர் இப்பதான் வந்து கேட்டுட்டு போனாரு இப்ப நீங்க வந்திருக்கீங்க என கூறுகிறார். பார்வதி வந்தா உடனே எனக்கு போன் பண்ணு என கூறிவிட்டு செல்கிறார். அவர்கள் சென்றதும் இந்த ஜில்லா முழுக்க தேடினாலும் பார்வதி கிடைக்க மாட்டா என கூறுகிறார் செல்வம்.

வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு பக்கமாக பார்வதியைத் தேடி அலைகின்றனர். சந்தியாவின் சரவணன் டவுன் பக்கம் சென்று தேடுகின்றனர். கடை கடையாக ஏறி அலைகின்றனர். இன்னொரு பக்கம் சிவகாமி தன்னுடைய கணவருடன் சேர்ந்து ஊருக்குள் தேடி பார்க்கிறார். பார்வதியை காணாமல் எல்லோரும் பதறுகின்றனர். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Raja Rani 2 Serial Episode Update 16.05.22
jothika lakshu

Recent Posts

எளிமை மாறாதவர்..! – கார்த்தி குறித்து நெகிழ்ந்த சர்தார் 2 நாயகி ஆஷிகா ரங்கநாத்!

கன்னட திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே கவனம் பெற்றுவரும் நடிகை ஆஷிகா ரங்கநாத், ‘சர்தார் 2’…

23 hours ago

சூரியின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி – ‘மண்டாடி’ படத்தை பாராட்டிய சிவகார்த்திகேயன்!

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இன்று (செப்.10) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள்…

23 hours ago

இளையராஜாவின் சொத்துகளை பறிமுதல் செய்யக் கோரிக்கை – டெல்லி உயர் நீதிமன்றத்தில் ‘சரிகம’ மனு!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.…

23 hours ago

சர்தார் 2 திரை விமர்சனம்

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சர்தார் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக…

1 day ago

மண்டாடி திரை விமர்சனம்

ராமநாதபுரத்தில் காலம் காலமாக கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் பாரம்பரியமான பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள…

1 day ago

Higher Promo Song

Higher Promo Song | An Ordinary Man | Ravi Mohan | Yogi Babu | Keneeshaa…

1 day ago