சந்தியாவின் கனவை நிறைவேற்ற சரவணன் எடுக்கப்போகும் முடிவு.. சரவணனின் ஏடிஎம் கார்டை திருடிய அர்ச்சனா.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடு சரவணன் தூங்கி எழுந்திருக்கும் போது சந்தியா புத்தகங்களை கையில் வைத்திருப்பதை பார்த்து இரவு பேசியதை மனதில் வைத்து சந்தியா மீண்டும் படிக்கத் தொடங்கி விட்டார் என நினைக்கிறார். ஆனால் சந்தியா புத்தகங்கள் அனைத்தையும் இருக்கும் ஒரு சூட்கேசில் வைத்து அதை வெளியே எடுத்துச் செல்கிறார். இதைப்பார்த்த ரவணன் அதிர்ச்சி அடைகிறார். சரவணன் கூப்பிட்டும் சந்தியா திரும்பி பார்க்காமல் வெளியே சென்று விடுகிறார்.

பிறகு அர்ச்சனா அவருடைய மாமனார் என இருவரும் ஹாலில் இருந்த நிலையில் அப்போது சரவணன் இங்கு வந்து அப்பாவிடம் பேசி விட்டு கடைக்கு கிளம்புவதாக கிளம்பினார். அந்த நேரத்தில் போன் அடிக்க போனை பாக்கெட்டில் இருந்து எடுக்கும் போது அவருடைய ஏடிஎம் கார்டு கீழே விழுகிறது. இதை கவனித்த அர்ச்சனா பத்தாயிரம் ரூபாய் பணத்தை இந்த ஏடிஎம் கார்டில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்கிறார். கீழே விழுந்த கார்டை கவனிக்காமல் சரவணன் சென்று விட நைசாக சென்று அதனை அர்ச்சனா எடுத்துக் கொள்கிறார்.

பிறகு சரவணன் சந்தியாவின் அண்ணனை சந்தித்து வீட்டில் நடந்த விசயங்களை கூறுகிறார். சந்தியாவை இப்படி பண்ணுவதால் நான் தோற்று விடுவேனோ என பயமாக இருக்கிறது என கூறுகிறார். கொஞ்ச நாளைக்கு இதை ஆர போடுங்க, ஆனால் கை விட்டுடாதீங்க சந்தியா போலீசாக வேண்டும் என்பதை ஒரு காலமும் மறந்து விட மாட்டாள் என அவருடைய அண்ணன் கூறுகிறார்.

பிறகு சந்தியா அவருடைய அன்னிக்கு போன் செய்து சிவராத்திரி பூஜைக்கு அழைக்கிறார். அப்போது உங்க அண்ணன் அங்கு வந்தாரா என்ன சொன்னாரு என கேட்ட அண்ணன் வரலையே என சந்தியா சொல்கிறார். சரவணன் வர சொல்லி இருந்தாரே அங்கே வரலையா என்று கேட்க இல்லை என கூறுகிறார். பிறகு சந்தியா எதுக்காக வரச் சொன்னார் என தெரியாமல் குழம்பி போய் போனை வைத்து விடுகிறார்.

சரவணன் கடையில் மயிலு மற்றும் சக்கரையை அழைத்து நாடகம் போட போடுவதைப் பற்றி பேசுகிறார். வீட்டில் இந்த விஷயம் யாருக்கும் தெரிய கூடாது என்று சொல்லி விடுகிறார். மயிலும் சரி என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பி விடுகிறார். சந்தியாவின் கனவு சம்பந்தப்பட்ட நாடகமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பக்கம் அர்ச்சனா ரூமில் இருந்து வெளியே வர அப்போது எதிரில் வந்த சந்தியாவின் மீது மோதி விடுகிறார். அப்போது கையில் இருந்த ஏடிஎம் கார்டு கீழே விழுந்துவிடுகிறது. சந்தியாவிடம் சத்தம் போட்டு அவரை அனுப்பி வைக்க முயற்சி செய்கிறார் அர்ச்சனா. சந்தியாவிற்கு சந்தேகம் வந்துவிடுகிறது. திடீரென்று கீழே இருக்கும் ஏடிஎம் கார்டை காலால் மிதித்துக் மறைத்துக் கொள்கிறார் அர்ச்சனா. எதையும் நீ காலை போட்டு மறைக்கின்ற எனது என சந்தியா கேட்க அதெல்லாம் ஒன்றும் இல்லை நீ என்ன போலீசா விசாரணை பண்ணிட்டு இருக்க என கேட்கிறார். ‌ நீ நினைக்கிற உன்னுடைய கனவு என்னைக்குமே நிறைவேறாது போய் வேலையை பாரு என கூறுகிறார். என்னது நீ சொல்லு இல்ல நீ செஞ்ச எல்லாத்தையும் அத்தை கிட்ட சொல்லுவ என சந்தியா சொல்ல எதை சொல்லுவ என அர்ச்சனா கேட்கிறார். சரவணனின் பாராட்டு விழாவிற்கு என்னை போகவிடாமல் நீ போட்ட டிராமாவை பற்றி மொத்தமாக சொல்லுவேன் என மிரட்டுகிறார்.

இந்த நேரத்தில் சிவகாமி சந்தியாவை அழைக்க போ அத்தை கூப்பிடுறாங்க என கூறுகிறார். சந்தியாவும் சென்றுவிட அர்ச்சனா அந்த ஏடிஎம் கார்டை கையில் எடுத்துக் கொள்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Raja Rani 2 Serial Episode Update 15.03.22
jothika lakshu

Recent Posts

‘அரசன்’ முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு

கலைப்புலி V Creations எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம்…

4 hours ago

தமிழ் சினிமாவில் 50 வருட அனுபவம் கொண்டவர் பாக்யராஜ்

பிரபல இயக்குநரும், நடிகரும், திரைத்துறையின் பல்துறை கலைஞருமான கே. பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சென்னை கிரீம்ஸ்…

4 hours ago

திரைப்பட இயக்குநர் கே. பாக்யராஜ்- வாழ்க்கை வரலாறு சிறப்பு தொகுப்பு

தமிழ் சினிமாவின் “திரைக்கதையின் மன்னன்” என போற்றப்படும் இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் கே. பாக்யராஜ் (கிருஷ்ணசாமி பாக்யராஜ்) 1953…

4 hours ago

பாரதிராஜா மறைந்து 17 நாட்களில் காலமான பாக்யராஜ்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான கே. பாக்யராஜ் (73) இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். உடல்நலக்குறைவு…

4 hours ago

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமானார்

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக விளங்கிய கே. பாக்யராஜ் இன்று காலமானார்.…

6 hours ago

Nightu Nila Lyric Video

Nightu Nila Lyric Video | Vekkai | G.V. Prakash Kumar | Shivani | Akiran Moses

1 day ago