மாயாண்டியால் கடுப்பான வெண்பா.. லட்சுமி கேட்ட கேள்வியால் அதிர்ச்சியான பாரதி.. பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் வெண்பா எல்லாமே என் கையை விட்டு போகுது, நான் மொக்கையாகி விட்டேன். தோற்றுக் கொண்டே போகிறேன் என புலம்ப, நீங்க எவ்வளவு பெரிய வில்லி, எட்டு ஒன்பது வருஷமாக பாரதியை டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க விடாம மொத்த கதையையும் மாத்தி கொண்டு போறீங்க என பாராட்டுகிறார். மேலும் வெண்பா மாயாண்டியிடம் நம்ம குடும்பி இருக்கு என புலம்புகிறார். இந்த நேரத்தில் மாயாண்டி வெண்பாவிற்கு போன் செய்கிறார்.

50,000 பணம் வேண்டும் என கேட்க வெண்பா அதெல்லாம் தரமுடியாது உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ என போனை வைத்து விடுகிறார். பிறகு வெண்பா கண்ணம்மாவுக்கு பிறந்தது இரட்டை குழந்தை என்பதை பேசும் வீடியோவை அனுப்பி வைக்க அதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைகிறார். பிறகு எனக்கு போன் செய்து மீண்டும் பணத்தை கேட்கிறார். இல்லை என்றால் இந்த வீடியோவை அனுப்ப வேண்டியவர்களுக்கு அனுப்புகிறேன் என கூறுகிறார். ரெண்டு நிமிஷத்தில் பணத்தைப் போட்டு விடுங்க என சொல்ல வெண்பாவும் சரி என போனை வைக்கிறார்.

இந்த பக்கம் சௌந்தர்யா வீட்டில் எல்லோரும் ஒன்றாக இருக்க அந்த நேரத்தில் லட்சுமி வீட்டிற்கு வந்து பாரதியிடம் உங்களிடம் ஒரு இன்பர்மேஷன் கேட்க வேண்டும் என கூறுகிறார். பாரதியின் என்ன கேடு என சொல்ல நான் இங்கே இருக்க ஏதோ ஒரு ஹாஸ்பிடல்ல தான் பொறந்தே நாம் அதை இடித்துவிட்டு சூப்பர் மார்க்கெட் கட்டிட்டாங்களாம். அது எங்க இருக்கு என கேட்கிறார். அந்த ஹாஸ்பிடல் மட்டும் எங்கே இருக்குன்னு சொல்லுங்க நானே தேடி எங்க அப்பாவை கண்டுபிடிச்சிக்கிறேன் என கூறுகிறார். இதை கேட்ட பாரதி அதிர்ச்சி அடைகிறார். அது கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம் என சொல்கிறார் பிறகு லட்சுமி சௌந்தர்யாவிடம் கேட்க அவரும் அமைதியாகவே இருக்கிறார். உங்களுக்கு தெரிந்து இருக்கும் அதனால தான் இங்கே வந்தேன் சரி நான் கிளம்புகிறேன் என ஸ்கூலுக்கு கிளம்பி விடுகிறார்.

பிறகு சௌந்தர்யா கண்ணம்மாவுக்கு போன் செய்து இந்த விஷயத்தை சொல்ல இதைக் கேட்டு அவர் ஷாக் ஆகிறார். பிறகு இந்த விஷயங்களை கூட அமர்ந்திருந்த வாய்தா வடிவுகரசியிடம் சொல்ல பேசாம நீ உண்மைய சொல்லிடு என சொல்ல சொன்னா அதுக்கு அப்புறம் என்ன நடக்கும்னு தெரியாது, அவளா கண்டுபிடிச்சா யாரு தடுக்க முடியும் என்று கூறுகிறார். மேலும் வாய்தா வடிவுக்கரசி லட்சுமியுடன் எண்ணத்தை திசை திருப்பணும் அதுக்கு ஏதாவது பண்ணனும் என்று கூறுகிறார்.

இந்தப் பக்கம் பாரதி ஹேமாவை கூட்டிக்கொண்டு காரில் சென்று கொண்டிருக்க அப்போது அப்பா தான் முதல் ஹீரோ என எங்க டீச்சர் சொன்னாங்க. எனக்கு நீங்க இருக்கீங்க ஆனா லட்சுமிக்கு அப்பா இல்ல அவ ரொம்ப பாவம். அவ அந்த அப்பாவைத் தேடி எங்கெங்கேயோ அலைகிறார் என சொன்ன பாரதி டென்ஷன் ஆகிறார். இப்போ நீயும் அவரோட சேர்ந்துகிட்டு என கேட்கிறார். பிறகு ஹேமா உண்மையை சொல்லுங்க லட்சுமி உங்க அப்பா வருவாரா மாட்டாரா என கேட்க உண்மையை சொல்கிறேன் கேட்டுக்கோ அவர் வரவே மாட்டார் என கூறுகிறார். அம்மா மாதிரி அவரும் சாமி கிட்ட போய் விட்டாரா என கேட்க இல்ல நான் அப்படி சொல்லல என்ன கூறுகிறார். இனிமே அப்பானு தேடுவதை விட்டுவிட்டு படிக்கிற வேலையை பாத்து சொல்லு என ஹேமாவிடம் சொல்கிறார் பாரதி.

இந்த பக்கம் மாயாண்டிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை சாந்தியின கொடுத்து கூடவே சாப்பாடு மீன் குழம்பையும் கொடுத்து அனுப்புகிறார் வெண்பா. இதை சாப்பிட்ட பத்து நிமிஷத்துல மாயாண்டி மயங்கி விழுவான். அவனை தூக்கிட்டு போய் துர்காவை கட்டிப் போட்டிருக்க இடத்தில் கட்டி போட்டு விடலாம் என திட்டம் போடுகிறார். சாந்தியும் சூப்பர் ஐடியா என சொல்லிவிட்டு கிளம்ப இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


Bharathi Kannamma Serial Episode Update 15.03.22
jothika lakshu

Recent Posts

‘ஜெயிலர் 2’ படத்தில் ஷாருக் கானுக்கு பதிலாக ஹிருத்திக் ரோஷன்?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை…

23 hours ago

‘D55’ படத்தில் காவல்துறை அதிகாரியாக சாய் பல்லவி?

‘மாரி 2’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் நடிகர் தனுஷுடன் நடிகை சாய் பல்லவி இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018-ஆம்…

24 hours ago

Engal Thangam Official Trailer

Engal Thangam Official Trailer | Samantha | Raj Nidimoru | Nandini Reddy | Santhosh Narayanan

24 hours ago

சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ டிரெய்லர் வெளியீடு!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள தெலுங்குத் திரைப்படம் ‘மா இன்டி பங்காரம்’. நந்தினி ரெட்டி…

24 hours ago

‘மண்டாடி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘விடுதலை’ படத்தின் மூலம் கதாநாயகனாக புதிய பயணத்தை தொடங்கிய நடிகர் சூரி, தொடர்ந்து ‘கருடன்’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களின் வெற்றிக்குப்…

1 day ago

அரசியலில் களம் இறங்கும் ராகவா லாரன்ஸ்?

நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக முன்பே தெரிவித்திருந்தார். இதனால்…

1 day ago