Raja Rani 2 serial Episode Update 12.04.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் அர்ச்சனா தன்னுடைய அப்பா அம்மாவை அழைத்துக்கொண்டு பாஸ்கர் வீட்டிற்குச் செல்கிறார். இது யார் வீடு டி எதற்காக இங்கு வந்து இருக்கோம் என அப்பா அம்மா கேட்க அப்போது தான் அர்ச்சனா இது பாஸ்கரோட வீடு பிரியாவுக்கு சம்பந்தம் பேச வந்திருக்கோம் என கூறுகிறார். வேண்டாம் இதெல்லாம் சரி இல்ல போய்விடலாம் என அர்ச்சனாவின் அப்பா அம்மா சொல்ல அதை அர்ச்சனா கேட்கவில்லை. நீங்க அமைதியா இருங்க நான் பார்த்துக்கிறேன் என கூறுகிறார்.
அதன்பிறகு பாஸ்கரின் அப்பா அம்மா உள்ளே இருந்து வந்து இவர்களை வரவேற்று உட்கார வைக்கின்றனர். பிறகு காபி கொடுத்து என்ன விசயமா வந்தீங்க என கேட்க அர்ச்சனா நீங்க முதலில் என் தங்கச்சியை தான் பொண்ணு பார்க்க வந்தீங்க. எங்க வீடு சின்னதா இருக்கு எங்க மாமியார் வீட்டு இதுதான் எங்க வீடுனு சொல்லி ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தேன். அப்போதுதான் நடக்கக் கூடாதது நடந்துவிட்டது என்னுடைய தங்கச்சிக்கு பதிலாக பார்வதியைப் பார்த்து பாஸ்கர் எனக்கு பிடித்திருக்கிறது சொல்லிட்டாரு. வித்தையில் எதுவும் கெட்டுப் போகல நிச்சயதார்த்தம் மட்டும்தான் முடிஞ்சிருக்கு. உண்மைய சொல்லப்போனா பார்வதிக்கு எதுவுமே சரியா தெரியாது உங்கள் வீட்டுக்கும் அந்தஸ்துக்கும் அவ ஏத்த மருமகளா இருக்க மாட்டா. என் தங்கச்சி ப்ரீயா எல்லா விதத்திலும் உங்களுக்கு சரியா இருப்பா. நீங்க ஓகேனு மட்டும் ஒரு வார்த்தை சொல்லுங்க கல்யாணத்த ஜாம் ஜாம்னு நடத்தி முடித்து விடலாம் என சொல்கிறார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியான பாஸ்கரின் பெற்றோர் போதும் நிறுத்துடி நீங்கதான் மனுச ஜென்மமா உனக்கு உன் நாத்தனார் பிடிக்காதுன்னு நீ ஒதுங்கி நில்லு, அத விட்டுட்டு இப்படி கல்யாணத்த நிறுத்தலாம் நீ வந்து பேசிக் கொண்டிருக்க வெக்கமா இல்ல நீ எல்லாம் என்ன பொண்ணு? வயித்து புள்ள காரியா இருக்கேன்னு பார்க்கறேன், இல்லைனா நடக்குறதே வேற. இந்த விஷயத்தை நான் பாஸ்கர் கிட்டயும் சொல்ல மாட்டேன் உங்கள் வீட்டில் சொல்ல மாட்டேன் காரணம் அந்த நல்ல குடும்பம் தலைகுனிந்து விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத்தான். உங்களுக்கு நான் வெட்கமே இல்லையா வெளியே போங்க என துரத்தி விடுகின்றனர்.
ஆனாலும் அர்ச்சனா இந்த வீட்டுக்கு என் தங்கச்சி தான் மருமகளா வருவா இதை நடத்திக் காட்டுவேன். அப்படியே இது நடக்கல நாளும் ஒரு காலமும் இந்த வீட்டில் பார்வதியை வாழ விட மாட்டேன் என சபதம் எடுக்கிறார்.
இந்த பக்கம் கடையில் பார்வதிக்காக துணி எடுக்க எல்லோரும் வந்திருக்கின்றனர். பாஸ்கர் விக்கியையும் வரச் சொல்கிறார். விக்கி பார்வதிக்கு போன் செய்து என்ன பார்வதி வரட்டுமா வந்து எல்லா உண்மையையும் சொல்லட்டுமா என மிரட்டுகிறார். பார்வதி போனை கட் செய்துவிட்டு பிறகு பாஸ்கருக்கு போன் செய்து நான் வந்துட்டேன் நான்காவது மாடிக்கு வந்துடுங்க அங்க தான் நல்ல புடவைகள் இருக்கும் என கூறுகிறார். பிறகு பாஸ்கர் ஒரு புடவையை தேர்ந்து எடுத்து வைத்திருக்க அது நன்றாக இருக்காது என சொல்லி விக்கி ஒரு புடவை எடுத்து பார்வதிக்கு வைத்து இதுதான் சூப்பராக இருக்கும் என சொல்கிறார். சரி நான் வீட்ல இருக்கேன் எல்லார்கிட்டயும் காட்டிவிட்டு மாதிரி என கீழே இறங்க அந்த நேரத்தில் மீண்டும் தன்னுடன் ஒரு நாள் இருக்க வேண்டும் என்பது பற்றி பேசுகிறார். யோசிச்சு சொல்லு என சொல்கிறார்.
வீட்டில் உள்ளவர்கள் விக்கி எடுத்துக் கொடுத்த புடவை சூப்பராக இருக்கிறது என சொல்கின்றனர். சந்தியா பார்வதி உனக்கு பிடிச்சிருக்கா என சொல்ல பார்வதி முகத்தில் சந்தோஷம் இல்லாமல் பிடிச்சிருக்கு என பதில் சொல்கிறார். இதை கவனித்த சந்தியா பார்வதிக்கு என்ன ஆச்சு கடவுளே எல்லாம் நல்ல தான் நடக்கணும் என பிரார்த்தனை செய்கிறார்.
வீட்டில் அர்ச்சனா என் தங்கச்சிய வேண்டாம்னு சொல்லிட்டாங்க, உங்கள சும்மா விடமாட்டேன் என விக்கிக்கு பார்வதியுடன் ஒன்றாக இருக்கும் போட்டோக்களை அனுப்பி இந்தக் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தணும் என சொல்கிறார். அதற்கு நீ தான் உதவி செய்யணும் என கூறுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…