Boney Kapoor About AK61 Movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான வலிமை திரைப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் மீண்டும் இதே கூட்டணி உருவாக உள்ள தனது 61ஆவது படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நேற்று பூஜையுடன் ஹைதராபாத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது அதேபோல் படப்பிடிப்பு நல்ல முறையில் தொடங்கப்பட்டுள்ளது.
பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கிய புகைப்படத்தை போனி கபூர் வெளியிட்டுள்ளார். வலிமை படத்தின் பூஜையின்போது டைட்டிலை படக்குழு அறிவித்திருந்த நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் என்ன என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அஜித் 61 படத்தின் டைட்டிலும் V என்ற எழுத்தில் தான் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படமும் ஆக்ஷன் அட்வென்ச்சர் படமாக இருக்கும் என போனிகபூர் அறிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…