சந்தியாவிற்கு சிவகாமி கொடுத்த அதிர்ச்சி.. சரவணன் எடுக்கப்போகும் முடிவு என்ன? இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. கோவிலுக்குப் போன சந்தியாவும் சிவகாமியின் சாமி கும்பிட்டுவிட்டு பிறகு பிரசாதம் வாங்கிக்கொண்டு ஓரிடத்தில் அமர்கின்றனர். சிவகாமி எங்களுக்கு கல்யாணம் ஆன புதிதில் இந்த கோவிலுக்கு தான் வந்தோம் அப்போது உன்னைப் போலத்தான் எனக்கு புடவை கட்டத் தெரியாது எதுவுமே தெரியாது. ஆனால் அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நான் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேன் என பேச்சைத் தொடங்குகிறார்.

உங்க மாமாவோட கூடப் பிறந்தவர் ஒரே ஒரு தம்பி அவர் கல்யாணமானதும் தனியாக போய் விட்டார். உங்கள் மாமாவுக்கு மூணு தங்கச்சி, 2 பேர் கல்யாணம் ஆகாமல் இருந்தாங்க. நான் வந்த பிறகுதான் குடும்பப் பொறுப்பை முழுசாக எடுத்துக் கொண்டு அவர்களுக்கு கல்யாணம் பண்ணி வைத்தேன். வீட்டுக்கு வர மருமகள் குடும்ப பொறுப்பை முழுசா எடுத்துக்கிட்டு இந்த குடும்ப மரமாக வளர்ந்து பூவும் காயும் ஆக மாறும் போது தான் அந்த மகிழ்ச்சி நமக்கு தெரியும். அதைவிடப் பெரிய சந்தோஷம் இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை. எல்லோருக்கும் கனவு நிறைய இருக்கும் ஆனால் அதெல்லாம் நிறைவேறாது.

குடும்பத்துக்காக எல்லாத்தையும் பொறுத்து கொண்டு தான் போக வேண்டும். சரவணன் உன்னுடைய போலீஸ் கனவு பற்றி சொன்னான். அவனை நீ சமையல் போட்டியில் ஜெயிக்க வைத்து அனைவரும் அந்த இடத்திற்கு கொண்டு வந்து இருப்பதால் உன்னுடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும் என அவன் நினைக்கிறான். ஆனால் அவனுக்கு ஒரு தம்பி ஒரு தங்கச்சினு ரெண்டு பேர் இருக்காங்க அவங்க கரை சேர்க்க வேண்டியது உங்களுடைய கடமை.

முதல்ல மருமகளா இந்த குடும்பத்துக்கு நீ செய்ய வேண்டிய கடமைகளை செய்ய அதன் பிறகு உன்னுடைய கனவைப் பற்றி யோசி என்று சொல்லிவிடுகிறார். இதையெல்லாம் போட்டு கேட்டேன் அர்ச்சனா சிவகாமி சொல்வதைக் கேட்டு உற்சாகம் அடைகிறார். மறு வார்த்தை பேச முடியாமல் சந்தியா அமைதியாகவே கண்ணீர் விட்டபடி அமர்ந்து கொண்டிருக்கிறார். நீ படிச்சவன் சொல்றத குறிஞ்சிப்பண் நினைக்கிறேன் என சிவகாமி சொல்லி அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தார்.

இந்தப் பக்கம் சரவணன் மட்டும் கடையில் தனியாக இருக்க அப்போது அங்கு வந்த அவருடைய அப்பா சிவகாமி சந்தியாவை கோவிலுக்கு அழைத்து சென்றிருக்கா. போலீஸ் விஷயத்தைப் பற்றிப் பேச கூட்டிட்டு போய் இருப்பார். உங்கம்மா பிடிவாதமாக தான் இருப்பா. வீட்டுக்கு வந்ததும் நடப்பதை வைத்து நீ ஒரு நல்ல முடிவை எடு.

சந்தியாவின் கனவை நிறைவேற்ற வேண்டியது என்னுடைய கடமை அதை மறந்துடாதே என கூறிவிட்டு அவர் வீட்டிற்கு கிளம்பி விட்டார். இந்தப் பக்கம் சந்தியாவும் சிவகாமியும் வீட்டுக்கு வந்தபோது பக்கத்து வீட்டுப் பெண்மணி ஒருவர் வந்து தன்னுடைய மருமகள் முழுகாம இருப்பதாக கூறி ஸ்வீட் கொடுக்கிறார். சந்தியாவின் கூடிய சீக்கிரம் நல்ல விஷயம் சொல்லுவா என சிவகாமி கூறுகிறார்.

பிறகு இருவரும் சென்ற போது சிவகாமி நான் இங்கே சொன்னதையும் நினைவில் வைத்துக்கொள் கோவிலில் சொன்னதையும் நினைவில் வைத்துக்கொள், சீக்கிரமா ஒரு குழந்தையைப் பெற்றுக் கொடு என கூறுகிறார். இதனால் சந்தியா என்ன செய்வது எனத் தெரியாமல் தவிக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.

Raja Rani 2 Serial Episode Update 10.03.22
jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

1 week ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

1 week ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

1 week ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

1 week ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

1 week ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

1 week ago