Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சந்தியா பாராட்டு விழாவிற்கு போவதை தடுக்க திட்டம் போட்ட அர்ச்சனா.. நடக்கப்போவது என்ன.. ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்

Raja Rani 2 Serial Episode Update 01.03.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சரவணனுக்கு ஒரு பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்திருந்த நிலையில் அனைவரும் இந்த விழாவிற்காக கிளம்பிக் கொண்டு இருக்கின்றனர். சந்தியா சரவணன் எடுத்துக்கொடுக்க புடவையை கட்டிக் கொள்கிறார். சரவணன் சந்தியா எழுதிவைத்த பேப்பரை மாற்றி அவர் தன்னுடைய அண்ணன் மகளுக்கு எழுதிய கடிதத்தை எடுத்து சென்று விடுகிறார்.

இந்தப் பக்கம் அர்ச்சனா அப்படி என்ன சாதித்து விடாது இவருக்கு பாராட்டு விழா நடத்துகிறார்கள். பொம்பளைங்க தனம் அங்குதான் வீட்டுல சமைக்கிறாங்க அப்ப அவங்களுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டியதுதானே என புலம்ப இந்த நேரத்தில் செந்தில் வர அவரிடம் நாம எதுக்கு போகணும் அப்படி என்ன உங்க அண்ணன் சாதித்து விட்டார்? என்னதான் ஊர்க்குருவி உயர பறந்தாலும் பருந்தாகாது என கிண்டல் அடிக்கிறார். செந்தில் அர்ச்சனாவை திட்டி விட்டு வெளியே சென்றுவிடுகிறார்.

பிறகு அனைவரும் கிளம்பும் நேரத்தில் அர்ச்சனா தனக்கு மயக்கம் வருவதுபோல நடிக்கிறார். மயக்கமா வருது வயித்தை புரட்டுது என கூறுகிறார். சந்தியாவை எலுமிச்சம் பழம் சாறு உப்பு போட்டு எடுத்து வரச்சொல்லி அனுப்பி வைக்கிறார் சிவகாமி. அதை குடித்த பிறகு ஓரளவுக்கு பரவாயில்லை என கிளம்பலாம் என சொல்லிவிட்டு மீண்டும் தலை சுற்றுவது போல நடிக்கிறார். இதனால் ஆண்கள் எல்லோரையும் அனுப்பி வைத்துவிட்டு சிவகாமி மற்றும் சந்தியா மட்டும் வீட்டில் இருக்கின்றனர்‌. அர்ச்சனா கொஞ்ச நேரம் உக்காந்து எழுந்தால் சரியா போயிடும் என்று சொன்ன பிறகு சிவகாமி சந்தியாவை இருந்து அழைத்து வரச் சொல்லிவிட்டு மயிலை கூட்டிக் கொண்டு கிளம்பி விடுகிறார்.

இதுதான் சந்தர்ப்பம் சந்தியாவை முடிந்த அளவிற்கு நிறைய வேலை வாங்க வேண்டும் என திட்டம் போடுகிறார் அர்ச்சனா. கொஞ்சம் டீ போட்டுத் தள்ளுமாறு சொன்ன சந்தியா டீ போட பால் கெட்டுப் போய்விடுகிறது. இதனால் கடைக்கு போய் வாங்கிட்டு வந்து போட்டு தரேன் என கூறுகிறார். ‌ இந்தப் பக்கம் சரவணன் இல்லை சந்தியா வரவில்லை என்று தவிக்கிறார். குடும்பத்தோடு நின்று விதவிதமாக போட்டோ எடுத்துக் கொள்கிறார். சந்தியாவின் அண்ணனும் அண்ணியும் பங்ஷனுக்கு வந்து விடுகின்றனர். இன்னும் கொஞ்ச நேரத்தில் பங்ஷன் தொடங்கி விடும் என நிகழ்ச்சி குழுவினர் கூறுகின்றனர்.

சரவணனிடம் பார்வதி நாடகம் என்ன பேசுவது என முடிவு பண்ணிட்டீங்களா என கேட்க சந்தியா எழுதிக் கொடுத்து இருக்காங்க என கூறுகிறார் அப்படினா நன்றாகத்தான் இருக்கும் என பார்வதி சொல்கிறார். இந்த மாதிரி உங்க எல்லோரோட வெளியே வந்திருப்பது சந்தோஷமா இருக்கு என சந்தியாவின் அண்ணி சிவகாமியுடன் கூறுகிறார். சிவகாமி அடிக்கடி வீட்டுக்கு வந்து விடு என கூறுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 Raja Rani 2 Serial Episode Update 01.03.22

Raja Rani 2 Serial Episode Update 01.03.22