Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எங்கள் திருமணம் சட்டபூர்வமான திருமணம் இல்லை. நாங்கள் பிரிந்து விட்டோம். ராஜ்கிரன் மகள் எடுத்த முடிவு

நடிகர் ராஜ்கிரண் மகள் ஜீனத் பிரியாவை நாதஸ்வரம் தொலைக்காட்சி தொடரிலும் சில திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான முனீஸ் ராஜா காதலித்து எதிர்ப்பை மீறி ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்கிரண், பிரியா என்னுடைய சொந்த மகளே அல்ல, இனிமேல் இவர்கள் இருவரில் யாராவது என் பெயரை எதற்காக பயன்படுத்தினாலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் இருவருக்கும் என் குடும்பத்திற்கும், எவ்வித சம்பந்தமும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து தன் கணவர் ராஜ்கிரண் மீது அவதூறு பரப்புவதாக வளப்பு மகள் ஜீனத் பிரியா மீது ராஜ்கிரண் மனைவி பத்மஜோதி (எ) கதீஜா புகாரளித்துள்ளார். இதைத்தொடர்ந்து முசிறி டி.எஸ்.பி. முன்னிலையில் ஜீனத் பிரியா அவரது கணவர் முனீஸ் ராஜா ஆஜராகி விளக்கமளித்தனர். இந்த பிரச்சனை சில மாதங்கள் சமூக வலைதளத்தில் பேசுப்பொருளானது.

இந்நிலையில், தன் கணவர் முனீஸ் ராஜாவை பிரிந்துவிட்டதாக ஜீனத் பிரியா அதிர்ச்சி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “நான் 2023-ஆம் ஆண்டு நடிகர் முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டேன் என்பது அனைவரும் தெரிந்திருக்கும். ஆனால் நாங்கள் இப்போது பிரிந்துவிட்டோம். எங்கள் திருமணம் சட்டப்பூர்வமான திருமணம் இல்லை. அதுமட்டுமல்லாமல், இந்த திருமணத்திற்கு பிறகு என் அப்பாவை நிறைய கஷ்டப்படுத்திவிட்டேன். அப்படி நான் கஷ்டத்தை கொடுத்தும் எனக்கு ஒரு பிரச்சனை வரும் பொழுது என்னை கைவிடாமல் என்னை காப்பாத்தினீர்கள். இது நான் எதிர்பார்த்திராத கருணை. என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா” என்று பேசினார்.

Raj Kiran daughter latest news update
Raj Kiran daughter latest news update