சோனு சூட்டை கடுமையாக விமர்சித்து ரயில்வே துறை போட்ட பதிவு. பதிலளித்த சோனு சூட்.

ரெயில் படியில் பயணம் செய்த சோனு சூட்டுக்கு ரெயில்வே நிர்வாகம் கண்டனம் தெரிவித்தது. இதற்கு பதிலளித்து சோனு சூட் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மும்பையில் புறநகர் ரெயில்களில் வாசலில் நின்று பயணம் செய்து ஒவ்வொரு ஆண்டும் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதனை தடுக்க ரெயில்வே நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் சோனுசூட் ரெயிலின் வாசலில் அமர்ந்து மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்வது போன்ற ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்த வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சோனு சூட் அவரின் வீடியோவை பார்த்த வடக்கு ரெயில்வே சோனுசூட்டை கடுமையாக விமர்சனம் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “லட்சக்கணக்கான மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறீர்கள். ரெயிலில் வாசலில் அமர்ந்து பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. உங்களது வீடியோ தவறான செய்தியை நாட்டிற்கு கொடுக்கும். இது மாதிரியான வீடியோ உங்களது ரசிகர்களுக்கு தவறான தகவலை கொடுக்கும். தயவு செய்து இது போல் செய்யாதீர்கள். பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படியில் பயணம் செய்த சோனு சூட் மும்பை ரெயில்வே போலீஸ் கமிஷனரும் இது தொடர்பாக சோனுசூட்டை எச்சரித்துள்ளார். இது மிகவும் ஆபத்தான பயணம் என்றும், இது போன்ற காரியத்தில் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். படங்களில் வேண்டுமானால் ரெயிலின் வாசலில் அமர்ந்து பயணம் செய்யலாம். படம் நிஜ வாழ்க்கை கிடையாது. அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றும்படி மும்பை ரெயில்வே போலீஸ் கமிஷனர் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டிருந்தார். சோனு சூட் நடிகர் சூனு சூட் இதற்கு பதில் அளித்து பதிவிட்டுள்ளார். அதில், மன்னிக்கவும், சும்மா அங்கேயே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னும் இரயிலின் கதவுகளுக்கு அருகில் அமர்ந்து செல்லும் அந்த லட்சக்கணக்கான ஏழைகள் எப்படி உணருவார்கள். இந்தச் செய்திக்கும், நாட்டின் ரயில்வே அமைப்பை மேம்படுத்தியதற்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சோனு சூட், கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து நாடு முழுவதும் பிரபலமடைந்தார் என்பதும் அதிலிருந்து சோனுசூட் எதைச்செய்தாலும் அது செய்தியாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

jothika lakshu

Recent Posts

ஜெயிலர் 2 குறித்து சூப்பர் தகவலை கொடுத்த நடிகர் யோகி பாபு

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம்…

10 hours ago

ஏகே 54 என்பது தான் இயங்க ரசிகர்களை பயன்படுத்தாத ஒரு பீரங்கி.. பார்த்திபன் பேச்சு.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…

10 hours ago

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அவர்தான்.. ரஜினிகாந்த் குறித்து பேசிய சுராஜ் வெஞ்சாரமூடு..!

ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

14 hours ago

ரஞ்சித் சொன்ன வார்த்தை, கடுப்பான சூர்யா, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

14 hours ago

பெண் வீட்டார் எடுத்த முடிவு.. சந்தோஷத்தில் மனோஜ் விஜயா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

17 hours ago

முதல் படம் அனுபவம் குறித்து நேர்காணலில் பகிர்ந்து கொண்ட பிரியங்கா சோப்ரா.. யாரைப் பற்றி சொல்லியிருக்கிறார் பாருங்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…

1 day ago