நீரிழிவு நோய் மற்றும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ராகி மருந்தாகிறது.
நம் பாரம்பரிய உணவுகளில் முக்கியமான உணவு ராகி. இதில் இருக்கும் புரதம் தனிச்சிறப்பு மிக்கது.
ராகியில் இருக்கும் அதிக உயிரியல் மதிப்பு வாய்ந்த புரதம் உடலோடு எளிதாக கலந்து கொள்ளும்.
மேலும் நார்ச்சத்து கால்சியம் பொட்டாசியம் இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இது மலச்சிக்கல் பிரச்சனையை விரட்டுகிறது.
பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகள் ராகியை பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் அரிசியோடு ஒப்பிடும்போது 40 மடங்கு அதிக பாலிஃ பினால்கள் உள்ளது.
இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் காயத்தையும் ஆற்றுகிறது.
முக்கியமாக உடல் பருமன் உள்ளவர்கள் ராகியை பயன்படுத்துவது ஒரு வாடிக்கையாகிவிட்டது. இது உடல் நலத்திற்கும் ஆரோக்கியத்தை தருகிறது.