Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அரசியல் காமெடி கதையில் ராதா ரவி, ரவி மரியா,நாஞ்சில் சம்பத்

Radha Ravi, Ravi Maria, Nanjil Sampath in a political comedy story

அரசியல் காமெடி கதையில் ராதா ரவி, ரவி மரியா,நாஞ்சில் சம்பத்

நகைச்சுவை மிகுந்த கதைக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்புண்டு. அவ்வகையில் அரசியல் கலந்து எடுக்கப்படும் படத்தின் தகவல்கள் பார்ப்போம்..

கதை​யின் நாயகர்களாக ராதாரவி, ரவிமரியா நடிக்​கும் படத்​தை, ‘பழகிய நாட்​கள்’, ‘மூன்றாம் மனிதன்’ ஆகிய படங்களைத் தயாரித்​து, இயக்​கிய ராம்​தேவ் இயக்குகிறார்.

இப்படத்தில் கஞ்சா கருப்​பு, இயக்​குநர் பேரரசு, நிழல்​கள் ரவி, பழ.கருப்​பை​யா, நாஞ்சில் சம்​பத் உள்​பட பலர் நடிக்​கின்​றனர். கார்த்​திக் நாயர் ஒளிப்​ப​திவு செய்​யும் இப்​படத்​தைக் கண்​ணகி மைந்தன் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

இப்​படம் பற்றி இயக்குநர் தெரிவிக்கையில் ‘இது அரசி​யல் நையாண்டி, காமெடி திரைப்​படம். சமூகத்​துக்​குத் தேவையான கருத்துகளை மையப்படுத்தி இப்​படத்தின் திரைக்​கதை அமைக்கப்​பட்​டு உள்ளது. இதன் முதற்கட்ட படப்​பிடிப்பு நிறைவடைந்​துள்​ளது.

2-ம் கட்ட படப்​பிடிப்பு அடுத்த மாதம் தேனியில் தொடங்​கு​கிறது. நான் இயக்​கிய ‘பழகிய நாட்​கள்’, ‘மூன்​றாம் மனிதன்’ படங்கள், 10 கோடிக்​கும் மேற்​பட்ட பார்​வை​களைப் பெற்றுள்​ளது’ என தெரிவித்துள்ளார்.

Radha Ravi, Ravi Maria, Nanjil Sampath in a political comedy story
Radha Ravi, Ravi Maria, Nanjil Sampath in a political comedy story