Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ராயன், எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது 50-வது திரைப்படமாக ராயன் திரைப்படம் உருவாகி உள்ளது. துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், செல்வராகவன், காளிதாஸ், அபர்ணா பாலமுரளி, பிரகாஷ் ராஜ், எஸ் ஜே சூர்யா என எக்கச்சக்கமான பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. படத்தின் டிரைலரும் சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

இதனால் ராயன் படத்தின் ஃப்ரீ புக்கிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த திரைப்படம் ஃப்ரீ புக்கிங் மூலமாக ரூ 1.5 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனது 50-வது படமான இந்த படத்தை நடிகர் தனுஷே இயக்கி உள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.

Raayan movie free booking update
Raayan movie free booking update