Question about Vijay, actor Kiccha Sudeep and Srileela's opinion!
விஜய் பற்றிய கேள்வி, நடிகர் கிச்சா சுதீப் மற்றும் ஸ்ரீலீலா கருத்து!
கன்னட சினிமாவில் முன்னணி நடிகரான கிச்சா சுதீப், தற்போது கார்த்திகேயா இயக்கத்தில் ‘மார்க்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நவீன் சந்திரா, தீப்ஷிகா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனா. அதிரடி ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 25-ந்தேதி வெளியாக உள்ளது.
இதற்கிடையில், இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கிச்சா சுதீப் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து பேசினார்.
அப்போது நாயகி ரோஷ்ணி பிரகாஷிடம், ‘மேடையில் ஓரமாக அமர்ந்திருக்கிறீர்கள். படத்திலும் அப்படித்தானா?’ என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ரோஷ்ணி பதிலளிக்கும் முன்பு சுதீப், ‘இந்த மாதிரி ஒரு கேள்வி கூட படப்பிடிப்பில் வரவில்லை. அதனால், தான் இப்படம் நன்றாக வந்திருக்கிறது’ என கூறி நாயகிகள் இருவரையும் மேடைக்கு மத்தியில் வரவைத்து அமரவைத்தார்.
அதனை தொடர்ந்து, கிச்சா சுதீப்பிடம் பத்திரிக்கையாளர் ஒருவர், சார் இவ்வளவு அழகா எம்ஜிஆர் மாதிரி பேசுறீங்களே. நீங்களும் விஜய் மாதிரி அடுத்த முதல்வர் ஆக ஆசைப்படுறீங்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சுதீப் `அழகாக பேசுபவர்கள் எல்லாம் முதல்வராக முடியாது’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘பராசக்தி’ படத்தில் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர், தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தை அடிப்படையாக கொண்டு விஜய் நடித்திருக்கும் அரசியல் படம் ‘ஜனநாயகன்’ ஆகும். இது தமிழுக்கேற்ப மாறியிருப்பதாக கூறப்படுகிறது. இச்சூழலில் ஸ்ரீலீலாவிடம், விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
‘ஜனநாயகன்’ படம் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்கா என ஒருவர் கேட்டார். அதற்கு ஸ்ரீலீலா பதிலளிக்கையில்,
‘ஜனநாயகன்’ படம் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்கா என்றெல்லாம் எனக்கு தெரியாது. நானும் விஜய் ரசிகைதான். ஜனநாயகன் படம் பார்க்க ஆவலாக இருக்கிறேன்’ என கூறியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி,…
மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…