ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. இப்படத்தின் முதல் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. நட்பை மையமாக கொண்டு உருவாகி இருந்த இப்பாடலை 5 மொழிகளில் வெளியிட்டனர்.
தமிழில் அனிருத், தெலுங்கில் ஹேமச்சந்திரா, மலையாளத்தில் விஜய் யேசுதாஸ், கன்னடத்தில் யசின் நசிர், இந்தியில் அமித் திரிவேதி ஆகியோர் பாடி இருந்தனர். கீரவாணி என்கிற மரகதமணி இப்பாடலுக்கு இசையமைத்திருந்தார். இப்பாடல் யூடியூபில் டிரெண்டாகி வருகிறது.
இந்நிலையில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் பான் இந்தியா படமான புஷ்பா, தற்போது ‘ஆர்.ஆர்.ஆர்’ பட பாணியில் முதல் பாடலை வெளியிட உள்ளது. ‘ஓடு ஓடு ஆடு’ என பெயரிடப்பட்டுள்ள இப்பாடலுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இப்பாடலை தமிழில் பென்னி தயால், தெலுங்கில் ஷிவம், மலையாளத்தில் ராகுல் நம்பியார், கன்னடத்தில் விஜய் பிரகாஷ், இந்தியில் விஷால் தத்லானி ஆகியோர் பாடி உள்ளனர். இப்பாடல் வருகிற ஆகஸ்ட் 13-ந் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5 Languages, 5 singers & One Rocking Tune by @ThisIsDSP ????
Icon Staar @alluarjun's #PushpaFirstSingle on AUG 13th????#HBDRockStarDSP ❤️#DaakkoDaakkoMeka #OduOduAadu #OduOduAade #JokkeJokkeMeke #JaagoJaagoBakre#Shivam @Benny_Dayal @RahulNOfficial @rvijayprakash @VishalDadlani pic.twitter.com/r1xr2XaYDP
— Mythri Movie Makers (@MythriOfficial) August 2, 2021