pushpa 2 movie latest update
தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை பெற்றவர் நடிகை பிரியாமணி. அதன்பின் நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றார். தொடர்ந்து தமிழில் மசாலா படங்களிலும் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவை விட்டு விலகி தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தினார். பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும்போதே திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டு வந்தார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்த பிரியாமணி, அதன் மூலம் நிறைய வருமானமும் பிற படங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. அமலா பிரியாமணி நடிகர்கள் வில்லன் வேடங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். பேட்ட, மாஸ்டர், விக்ரம் படங்களில் விஜய் சேதுபதி வில்லன் நடித்து வரவேற்பை பெற்றதால் அவருக்கு வில்லன் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அதேபோன்று கதாநாயகிகளும் வில்லியாக நடிக்க விரும்புகிறார்கள். தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் வில்லி கதாப்பாத்திரத்தில் திரிஷா நடித்து பெயர் பெற்றிருந்தார்.
இந்நிலையில் பிரியாமணியிடம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகும் புஷ்பா 2-ம் பாகம் படத்தில் வில்லியாக நடிக்க படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புஷ்பா-2 படத்தில் விஜய்சேதுபதியை வில்லனாக நடிக்கவைக்க முயற்சி நடந்து வருகிறது. விஜய் சேதுபதிக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க பிரியாமணியை படக்குழு அணுகி உள்ளனர். அவருக்கும் வில்லி கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆர்வம் உள்ளதால் விரைவில் ஒப்புக் கொள்வார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அகத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி,ரெமோ,பைரவா,சாமி 2 ,சண்டக்கோழி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…