கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி இயக்குனராக வளம் வரும் மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.
இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பிரமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வரும் படக்குழு தொடர்ந்து இப்படம் குறித்த அப்டேட்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள முதல் திரைப்படமாக ‘பொன்னியின் செல்வன் -2’ வெளியாக இருப்பதை அறிவித்திருந்த படக்குழு தற்போது இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் இடம்பெற்றுள்ள ‘சிவோஹம்’ பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது.
Get ready to feel the divine power!#Shivoham lyrical video from today 6PM.#PS2 in cinemas worldwide from 28th April in Tamil, Hindi, Telugu, Malayalam, and Kannada!#CholasAreBack #PonniyinSelvan2 #ManiRatnam @arrahman @LycaProductions @RedGiantMovies_ @Tipsofficial… pic.twitter.com/ySbfiML4Yk
— Madras Talkies (@MadrasTalkies_) April 12, 2023