Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து வெளியான அலை கடல் பாடலின் வீடியோ

ps1-alaikadal-song-full-video update

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். அவரது இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரலாற்று சாதனையை படைத்து வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி மாபெரும் வசூல் சாதனையை படைத்து வருகிறது.

பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இப்படம் தற்போது ரூ.450 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகி இருக்கும் “அலைகடல்” என்ற பாடலின் முழு வீடியோவை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. ஏற்கனவே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்த இப்பாடல் மீண்டும் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.