ப்ரோமோஷனுகாக டெல்லி சென்ற PS 2 சோழர்கள். வைரலாகும் ஃபோட்டோஸ்

கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி இயக்குனராக வளம் வரும் மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாக்கி இருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாக இருப்பதாக படக்குழு அண்மையில் தெரிவித்து ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்க செய்திருந்தது.

மேலும் முதல் பாகத்தைப்போல் இப்படத்தின் 2 ஆம் பாகத்திற்கும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தீவிரம் காட்டி வரும் படக்குழு நேற்று முன்தினம் கோயம்பத்தூருக்கு சென்றிருந்தனர். அதன்பின்னர் நேற்று சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட படக்குழு அடுத்த கட்ட பிரமோஷனுக்காக டெல்லிக்கு சென்றுள்ளது. அதற்கான சிறப்பு விமானத்தின் முன்பு கார்த்தி, ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம், திரிஷா, சோபிதா மற்றும் ஜெயம் ரவி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

“எல்லோரும் கார்த்தியை சர்தாராக பார்க்கிறார்கள்; இது ஒரு நடிகனுக்கு கிடைத்த ஆசீர்வாதம்!” – சூர்யா

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…

2 days ago

ராஷ்மிகா மந்தனாவின் பிரம்மாண்ட பான் இந்தியா ஆக்‌ஷன் டிராமா ‘மைசா’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…

2 days ago

“தனுஷ் தான் என் ஒரே ஃபேவரிட்!” – ரசிகரின் கேள்விக்கு கயாடு லோஹர் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…

2 days ago

டெல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை: கொதித்தெழுந்த பூமி பெட்னேகர்!

தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

2 days ago

இயக்குநரிலிருந்து கதாநாயகனாக ஜேசன் சஞ்சய்? – சந்தீப் கிஷன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ்…

2 days ago

Sardar 2 Official Trailer

Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…

3 days ago