Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விக்ரமின் மகான் படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர்

producer lalithkumar-post-goes-viral

“செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனர் லலித் குமார் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘அசுரவதம்’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். இதையடுத்து மாஸ்டர், துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல், மகான், கோப்ரா போன்ற படங்களை தயாரித்தார்.தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியான ‘லியோ’ திரைப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் வெளியான இரண்டு நாட்களில் ரூ. 140 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து ரசிகர்கள் இப்படத்திற்கு வரவேற்பளித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் லலித் குமார், \”விக்ரம் சாரின் கோப்ரா, மகான் என இரண்டு படங்கள் ரிலீசாகாமல் இருந்தது. அதில் ஏதாவது ஒரு படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டிய சூழலில் இருந்தேன். வேறுவழியின்றி மகானை ஓடிடியில் ரிலீஸ் செய்தேன். கார்த்திக் சுப்பராஜை சமாதானப்படுத்தி தான் இந்த முடிவை எடுத்தேன். மகான் திரைப்படம் ஓடிடியில் வெளியிட்ட பின்னர் விஜய் சார் போன் பண்ணி இதெல்லாம் தியேட்டர்ல ரிலீஸ் ஆக வேண்டிய படம், ஏன் இப்படி செஞ்சீங்கனு திட்டியபோது தான் தப்பு பண்ணிட்டமோனு ரொம்ப வருத்தப்பட்டேன்\” என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.”,

producer lalithkumar-post-goes-viral
producer lalithkumar-post-goes-viral