தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பீஸ்ட் திரைப்படம் பெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படம் குறித்து மேடை ஒன்றில் ஆவேசமாக பேசியுள்ளார் தயாரிப்பாளர் கே ராஜன். பெரிய நடிகர்கள் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்கள் ஆனால் படம் லாபத்தையா தருகிறது? நஷ்டத்தை தான் கொடுக்கிறது. படம் தோல்வியடைந்தால் அதில் தயாரிப்பாளருக்கு மட்டும்தான் பாதிப்பு ஏற்படுகிறது. நடிகர்கள் சம்பளத்தை வாங்கிக் கொண்டு சென்று விடுகிறார்கள்.
ராதே ஷ்யாம் திரைப்படம் தோல்வியடைந்ததால் பிரபாஸ் தன்னுடைய சம்பளத்தில் பாதியை திருப்பிக் கொடுத்தார். அதேபோல் தமிழ் நடிகர்களும் மாற வேண்டும். தயாரிப்பாளர்களை காப்பாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இப்போதுகூட என்னைப் பேட்டி எடுத்தார்கள் என்னிடம் பீஸ்ட் பீஸ்ட் என்று கேட்கிறார்கள். அந்தப் படம் ஓடினால் எனக்கென்ன ஓடலன்னா எனக்கு என்ன? விஜய்யிடம் கால்சீட் கேட்டு நிற்கப் போவதில்லை, பணம் கேட்டு நிற்கப் போவது இல்லை ஆகையால் எனக்கு இதைச் சொல்ல பயமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
