Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரியங்கா நல்காரி எடுத்த அதிரடி முடிவு,வைரலாகும் அதிர்ச்சி தகவல்

தமிழ் சின்னத்திரை சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் பிரியங்கா நல்காரி. இதனைத் தொடர்ந்து இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீதாராமன் தொடரில் நடித்து வந்தார்.

நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்ட பிரியங்கா கணவருடன் நேரத்தை செலவிட ஆசைப்பட்டு சீரியலில் இருந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து சில மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஜீ தமிழில் நளதமயந்தி என்ற சீரியலில் நடிக்க தொடங்கி நடித்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவரை instagram பக்கத்தில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர் என்றனர். இப்படியான நிலையில் தனது instagram அக்கவுண்ட்டை மொத்தமாக க்ளோஸ் செய்துள்ளார்.

சமீபத்தில் கணவரை பிரிந்த பிரியங்காவிடம் தொடர்ந்து பலரும் கணவர் குறித்த கேள்வி எழுப்பி வருவதால் இப்படி என முடிவை எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Priyanka nalkari Latest news
Priyanka nalkari Latest news