Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திருமண வாழ்க்கை குறித்து பிரியங்காவிடம் கேட்ட ரசிகர்.. என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க

priyanka about marriage life

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளராக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களை மிகப்பெரிய இடத்தை பிடித்திருப்பவர் பிரியங்கா. மேலும் இவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கு கொண்டார்.

முன்பெல்லாம் தன்னுடைய கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வந்த பிரியங்கா சமீபகாலமாக அதை கைவிட்டு விட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட ஒருமுறை கூட அவருடைய கணவர் எட்டிப் பார்க்கவில்லை. இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக சொல்லப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இவர்களின் திருமண வாழ்க்கை குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்ப அதற்கு பிரியங்கா நம்மை புரிந்து கொள்ளும் கணவர் கிடைத்தால் நாமும் விசுவாசமாக இருந்தால் வாழ்க்கையில் எல்லாம் சாத்தியம் என தெரிவித்துள்ளார். இவர் வித்தியாசமாக பதிலளித்து இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் ஒருவேளை இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டதோ என பேச தொடங்கி உள்ளனர்.

ஆனால் உண்மை என்ன கணவரை விவாகரத்து செய்துவிட்டார் பிரியங்கா என்பது அவர் விளக்கம் அளித்தால் தான் இறுதியாக தெரியவரும். பதில் அளிப்பாரா பிரியங்கா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

priyanka about marriage life
priyanka about marriage life