Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஓடிடி இல் வெளியான பிரின்ஸ். மகிழ்ச்சியில் ரசிகர்கள்

prince-streaming-now-on-hotstar

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவான ‘பிரின்ஸ்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானது.

இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தில் சிவாவுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், வெளிநாட்டு நடிகை மரியா ரியான்ஷாப்கா, பிரேம்ஜி ஆகியோர் நடித்திருந்தனர்.

தமன் இசையில் உருவாகி இருந்த இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி பிரின்ஸ் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் என்ற பிரபல OTT தளத்தில் நவம்பர் 25ஆம் தேதியான இன்று வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

prince-streaming-now-on-hotstar

prince-streaming-now-on-hotstar