மலையாள சினிமா இந்தியா முழுவதும் பிரபலமடைய ப்ரேமம் படம் ஒரு காரணம். இப்படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்தார்.
நிவின்பாலி இதில் ஹீரோவாக நடித்திருந்தார். ப்ரேமம் தமிழகத்தில் மட்டுமே 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.
அப்படியிருக்க இப்படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் சமீபத்தில் ஒரு தகவலை கூறியுள்ளார்.
இதில் ப்ரேமம் தயாரிப்பாளர் முதலில் இப்படத்தில் துல்கர் சல்மானை தான் நடிக்க பேசினாராம்.
ஆனால், அல்போன்ஸ் தான், நிவின் இதற்கு செட் ஆவார் என்று உறுதியாக நின்று நடிக்க வைத்தாராம்.

