Tamilstar
Health

கர்ப்பிணி பெண்கள் கரும்பு சாப்பிடலாமா சாப்பிடக்கூடாதா என்று தெளிவாக பார்க்கலாம்.

Pregnant women can clearly see whether they can eat sugarcane or not

பொதுவாகவே கர்ப்பிணி பெண்கள் அதிக கட்டுப்பாட்டுடனும் கவனத்துடனும் இருப்பார்கள். குறிப்பாக உண்ணும் உணவுகளில் முக்கியத்துவம் கொடுத்து உண்ணுவது வழக்கம். அப்படி கரும்பு சாப்பிடுவதால் கர்ப்பிணிகளுக்கு நன்மை தீமை என இரண்டுமே தரக்கூடியது.

கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் ஏற்படும்போது கரும்பு சாப்பிடலாம். ஏனெனில் கரும்பில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் ஆண்டி ஆக்சிடென்ட் நிறைந்திருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு இது ஒரு சிறந்த நிவாரணியாக இருக்கிறது.

இது மட்டும் இல்லாமல் கர்ப்ப காலத்தில் பெண்கள் பலவீனமாகவும் சோர்வாகவும் இருக்கும்போது கரும்புச்சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆனால் கரும்புச்சாறு அல்லது கரும்பு அதிகமாக உட்கொள்ளும் போது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை அதிகரித்து நீரிழிவு நோயையும் உண்டாக்க கூடும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கர்ப்ப காலத்தில் கரும்பு அல்லது கரும்பு ஜூஸ் குடிப்பதை தவிர்ப்பது நல்லது

குறிப்பாக இது கர்ப்ப காலத்தில் குறை பிரசவம் பிறக்கும் ஆபத்தை கூட ஏற்படுத்தி விடலாம். எனவே ஆபத்தை அறிந்து அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.