மாஸ்டர் படம் ரிலீஸுக்கு முன்னரே ரூபாய் 200 கோடி வசூலித்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.
உலகம் முழுவதும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி வெளியாகவிருந்த இப்படம் பரவிவரும் வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அமேசான் ப்ரைம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்த படத்தை OTT வழியாக வெளியிட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் படக்குழு அதற்கு வாய்ப்பே இல்லை என மறுத்து விட்டது.
இதற்கான காரணம் மாஸ்டர் படத்தின் தமிழக திரையரங்கு உரிமை ரூபாய் 70 கோடி சாட்டிலைட் உரிமை ரூபாய் 30 கோடி மற்ற மொழிகளில் சாட்டிலைட் உரிமை, ஓவர்சீஸ் ரிலீஸ் ரைட்ஸ் என மொத்தமாக சேர்த்து இதுவரை 200 கோடிக்கும் மேலாக வியாபாரமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் யாரும் கொடுத்த பணத்தை திருப்பி கேட்க விலை எவ்வளவு நாளானாலும் மாஸ்டர் படத்தை வெளியிட ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இதனால் மாஸ்டர் படக்குழு படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என உறுதியாக முடிவு எடுத்துள்ளது. அதேசமயம் தியேட்டர்கள் திறந்தவுடன் மாஸ்டர் படம் வெளியாகாது. மாஸ்டர் உலகம் முழுவதும் ஒரே தினத்தில் வெளியாகும் என்பதால் அனைத்து நாடுகளிலும் தியேட்டர்கள் திறக்கப்பட வேண்டும். அப்போதுதான் இப்படத்தின் ரிலீஸ் குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
புளிச்சக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
காந்தி கண்ணாடி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…
சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
மதராசி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா காலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…