கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யாஷ். இவரது நடிப்பில் வெளியாகி கேஜிஎப் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.
முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகம் வேற லெவலில் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என்ன கதையை எப்படி எழுதினீர்கள் என்று கேட்க பிரஷாந்த் நீல் ஷாக் பதில் கொடுத்துள்ளார்.
பொதுவாக நான் குடித்துவிட்டு தான் கதையை எழுதுவேன். மறுநாள் காலையில் நிதானமாக இருக்கும் போது அதனைப் படித்துப் பார்த்து திரைக்கதை எழுதுவேன். அப்படித்தான் இந்த படத்தின் கதையையும் எழுதி உள்ளார்.
இதனைக் கேட்ட ரசிகர்கள் அப்போ கே ஜி எஃப் 2 படத்தின் வெற்றிக்குக் காரணம் குடிப்பழக்கம் தானா என கமெண்ட் அடித்து வருகின்றனர். மது போதையில் தான் இப்படி வெறித்தனமான கதையை எழுதினீர்களா என கூறி வருகின்றனர்.


