Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“விஜய்க்கு அரசியல் ஆலோசகராக பணியாற்ற மாட்டேன்”: பிரசாந்த் கிஷோர் பேச்சு

prashant-kishore-say-no-to-vijay tvk party

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து மேலும் ஒரு படத்தில் நடிக்க உள்ள விஜய் அடுத்ததாக முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் முக்கிய அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் தளபதி விஜய்யே கூப்பிட்டாலும் அவருக்கு முழு நேர அரசியல் ஆலோசகராக பணியாற்ற மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

அதே சமயம் தன்னை நம்பி வந்தவர்களை ஏமாற்ற மாட்டேன். என்னால் முடிந்த அட்வைஸை கொடுப்பேன் இது விஜய்க்கும் பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

prashant-kishore-say-no-to-vijay tvk party
prashant-kishore-say-no-to-vijay tvk party