prakash raj talk about thalapathy vijay
நடிகர் விஜய் தனது திரையுலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக களமிறங்கியிருப்பது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து விஜய் மக்கள் இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபத்தில் விஜய்யின் அரசியல் நிலைப்பாடு குறித்து வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.
பிரகாஷ் ராஜ் தனது பேட்டியில், விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஒரு புகழ்பெற்ற இயக்குனர் என்றும், விஜய் ஒரு நட்சத்திரமாக உருவாவதற்கு முன்பே பல படங்களை இயக்கியவர் என்றும் குறிப்பிட்டார். மேலும், விஜய் அரசியலுக்கு புதியவர் என்றும், அவருடன் தான் அரசியல் குறித்து தீவிரமாக விவாதித்தது இல்லை என்றும் அவர் கூறினார். விஜய்க்கு இருக்கும் மக்கள் செல்வாக்கின் காரணமாகவே அவர் அரசியலுக்கு வந்திருப்பதாக பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
பவன் கல்யாணை ஒப்பிட்டு பேசிய பிரகாஷ் ராஜ், இருவருக்குமே நாட்டில் உள்ள பிரச்சனைகள் குறித்து தெளிவான புரிதலோ அல்லது பார்வையோ இல்லை என்று சாடினார். பவன் கல்யாண் தனது கட்சியைத் தொடங்கி பத்து வருடங்களாகியும் நிலையான அரசியல் நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்றும், அதே நிலைதான் விஜய்யிடமும் இருப்பதாக அவர் விமர்சித்தார்.
விஜய்யோ அல்லது பவன் கல்யாணோ தேர்தலில் சில இடங்களில் வெற்றி பெறலாம், ஆனால் அதன் பிறகு அவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று பிரகாஷ் ராஜ் கூறினார். விஜய் பேசும் போது திரைப்பட வசனங்களை கேட்பது போல் இருப்பதாகவும், அவருக்கு அரசியலில் ஆழமான புரிதல் இல்லை என்றும் அவர் காட்டமாக தெரிவித்தார். “இவரை நம்பியா இந்த நாட்டின் தலைவிதியை ஒப்படைப்பது?” என்று பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்து பல்வேறு யூகங்கள் நிலவி வரும் நிலையில், பிரகாஷ் ராஜின் இந்த வெளிப்படையான விமர்சனம் முக்கியத்துவம் பெறுகிறது.
விஜய்க்கு திரிஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. ஜோடி படத்தின் மூலம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
அகத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி,ரெமோ,பைரவா,சாமி 2 ,சண்டக்கோழி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…