தமிழ் சின்னத்திரையில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. சன் டிவிக்கு அடுத்தபடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. இந்த தொலைக்காட்சி சேனலில் புதியதாக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல்தான் வைதேகி காத்திருந்தாள்.
பிரஜன் நாயகனாக நடிக்க சரண்யா நாயகியாக நடிக்கிறார். மேலும் லதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த பிரஜன் தற்போது இதிலிருந்து விலகிக் கொண்டுள்ளார்.
சீரியலில் கமிட் ஆவதற்கு முன்பாகவே சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டுவிதமான சூட்டிங்கை பேலன்ஸ் செய்வது கடினமாக இருப்பதால் இந்த சீரியலில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார். நல்ல யூனிட் இதிலிருந்து பாதியில் விலகுவது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது என பிரஜன் தெரிவித்துள்ளார்.
திடீரென அவர் இந்த சீரியலில் இருந்து விலகிக் கொண்டது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
