pradeep-ranganathan-sent-gift-to-nayan-vicky
கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர். இவர்கள் கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி இருவீட்டர் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து சில மாதங்களிலேயே வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த இவர்கள் சமீபத்தில் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை மிகவும் எளிமையான முறையில் கொண்டாடினர்.
இதனை முன்னிட்டு அவர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் அவர்களது குழந்தைகளின் புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்டிருந்தனர். அப்புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் கொடுத்த சர்ப்ரைசால் எமோஷனலான நயன்தாராவின் வீடியோவும் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் கோமாளி, லவ் டுடே உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி பிரபல இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வரும் பிரதீப் ரங்கநாதன் விக்கி – நயன் தம்பதியினரின் திருமண நாளுக்கு வாழ்த்து தெரிவித்து கிப்ட் அனுப்பி வைத்திருக்கிறார். அதில் ஸ்வீட்டுடன் பிரதீப் அனுப்பியுள்ள கடிதத்தின் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார். அப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Haiwaan Official Teaser | Akshay Kumar, Saif Ali Khan | Priyadarshan | KVN Productions
Ram in Leela Official Trailer | Rio Raj | Vartika | Ankit Menon | Ramachandrran…
நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, சமீபத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் மூலம் ரசிகர்களின்…
1991-ஆம் ஆண்டு வெளியான ‘ஈரமான ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம்,…
கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.ஜே. பாலாஜி, மாணவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, “‘எல்.கே.ஜி’ படத்தைப் போல நிஜ…