baakiyalakshmi-episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்கியா பழனிச்சாமியிடம் போனில் பேசும்போது கல்யாணம் பற்றி எடுத்து சொல்ல அவரும் சில சமயங்களில் எனக்கும் இப்படி எல்லாம் தோன்றும் என சொல்ல அப்படி தோணும் போது நாம ஏன் சார் தனியா இருக்க வேண்டும்? நாம ஏன் கல்யாணம் பண்ணிக்க கூடாது என பாக்கியா கேட்க இத பார்த்த கோபி வாயில் அடித்துக் கொண்டு அலறுகிறார்.
பிறகு ஜெனி சோபாவை துடைத்துக் கொண்டிருக்க அமிர்தா நீங்க எதுவும் பண்ண வேண்டாம் என சொல்லி உட்கார வைத்து பேசிக் கொண்டிருக்க இனியா வீட்டை டெக்கரேட் செய்ய வேண்டும் என பொருட்களை எடுத்து வந்து நிற்கிறார்.
அதன் பிறகு எழிலும் அங்கு வந்து விட எல்லோரும் பழனிச்சாமிக்கு ஏத்தவங்க தான் என்று அந்த பெண்ணை பற்றி பேசி நல்ல ஜோடி என்று சொல்லிக் கொண்டிருக்க கோபி பாக்கியாவை பற்றி பேசுவதாக தவறாக புரிந்து கொள்கிறார்.
அதைத்தொடர்ந்து வீட்டுக்குள் வரும் கோபி இனியாவிடம் என்ன விஷயம் என கேட்க பழனிச்சாமி அங்கிள் வீட்டுக்கு பொண்ணு பாக்க வராரு என்று சொல்கிறார். அன்னைக்கு என்னை மட்டும் அப்பா அம்மா இந்த வயசுல உனக்கு இதெல்லாம் தேவையா என்று திட்டினார்கள் ஆனால் இன்றைக்கு குடும்பமே சேர்ந்து பாக்கியாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறாங்க இதெல்லாம் என்ன நியாயம் என புலம்பிக் கொண்டிருக்க அப்போது இனியா வர திரும்பவும் கோபி வீட்டையெல்லாம் டெக்ரேட் பண்ணி இருக்கீங்க என்ன விஷயம் என கேட்கிறார்.
இனியா அதான் சொன்னேனே பழனிச்சாமி அங்கிள் பொண்ணு பார்க்க வராரு என்று சொல்ல திரும்பவும் அதிர்ச்சி அடைகிறார். திரும்பத் திரும்ப கோபி கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்க இனியா வாயில் ஸ்வீட்டை திணித்துவிட்டு அங்கிருந்து நகர்கிறார். பிறகு இரண்டு ட்ரஸ் எடுத்து வந்து இதில் எது நல்லா இருக்கு? அம்மா பட்டுப் புடவை எல்லாம் கட்றாங்க நானும் அவங்க பக்கத்துல பளிச்சுன்னு தெரியணும் என்று கோபியிடம் சஜ்ஜெக்ஷன் கேட்க அவர் ஒரு டிரஸ்ஸை தேர்வு செய்து கொடுக்கிறார்.
அம்மாவுக்கு கல்யாணம் அதுக்கு அப்பா கிட்டயே டிரஸ் சூஸ் பண்ணி தர சொல்றா என கோபி புலம்புகிறார். ரூமுக்கு சென்ற கோபி ரூமில் நான் வெளியே போய் எப்படி தலை காட்டுவது? இந்த ஸ்கிரீன்லயே தூக்கு மாட்டிகிட்டு செத்துடலாம் போல இருக்கு என குழந்தை ராதிகாவும் மயூராவும் உள்ளே வந்து விடுகின்றனர்.
என்ன ஏதோ புலம்பிட்டு இருக்கீங்க என ராதிகா கேட்க பாக்யாவுக்கு கல்யாணம் என்ற விஷயத்தை சொல்ல போகும் கோபி அப்புறம் நமக்கே ஆப்பு வைப்பானு சொல்லாமல் ஆபீஸில் என்னை யாரும் மதிக்கிறதே கிடையாது நான் டம்மி பீஸ் ஆகிட்டேன் என சமாளிக்கிறார்.
இதை தொடர்ந்து கோபி ஒரே அப்செட்டா இருக்கு என்று சொல்வதால் சரி வாங்க என்னுடைய பிரண்டுக்கு நிச்சயதார்த்தம் அங்க போயிட்டு வரலாம் என ராதிகா கூப்பிட அங்கு போற நேரத்துல இங்க பாக்யாவுக்கு நிச்சயதார்த்தம் நடத்திடுவாங்க என்று குழம்பி நான் வரல என சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…
Modha Rathri Official Trailer | Rishikanth | Raja Karuppasamy | Anishma Anilkumar | Bharath Sankar
Ayyayo Ammaadi Lyrical Video | Sigma | Sundeep | Faria | Yuvan | Thaman S…
Irumudi Official Tamil Trailer | Ravi Teja | Priya Bhavani Shankar | Shiva Nirvana |…
Manamae Pogumo Lyrical Video | Maitri | Joel Johns | Priyanka NK | Kutti revathi…