pradeep ranganathan in love today movie hindi remake update
ஜெயம் ரவியின் கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்கி கதாநாயகனாக நடித்து அனைவருக்கும் பரீட்சையமான திரைப்படம் ‘லவ் டுடே’. கடந்த ஆண்டு சிறிய பட்ஜெட் திரைப்படமாக வெளியான இப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வசூல் வேட்டையாடி மாபெரும் வெற்றி அடைந்திருந்தது. பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் இப்படம் இந்தியில் ரீமேக் செய்ய போவதாகவும், அதன் உரிமையை Phantom films நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் தமிழில் லவ் டுடே திரைப்படத்தை தயாரித்த அர்ச்சனா கல்பாதி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். மேலும் இப்படத்தின் படக்குழு தொடர்பான அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறியிருக்கிறார். இந்த தகவல் தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
I Want Everything Lyric Video | Blast | Arjun | Ravi Basrur | Subash K…
Aathi Raasathi Video Song | Suriya's Karuppu | RJ Balaji | Sai Abhyankkar| Dream Warrior…
Fraud Payale Video Song | Con City | Arjun Das| Anna Ben | Yogi Babu|…
Parimala and Co Trailer | Jayaram | Urvasi | Pandiraaj | Sandy | Sanjana |…
கராத்தே மாஸ்டராக இருக்கும் அர்ஜுன், தனது மகள் ப்ரீத்தி முகுந்தனை சிறு வயதிலிருந்தே தைரியமான பெண்ணாக வளர்க்கிறார். “ஒரு பெண்…
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கிரைம் த்ரில்லர் திரைப்படமான “கர”, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே…