Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லவ் டுடே படத்திற்கு கிடைத்த வரவேற்பு..நன்றி தெரிவித்து பிரதீப் ரங்கநாதன் போட்ட பதிவு..

pradeep-ranganathan-about-love-today movie

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தை இயக்கி பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்தப் படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரதீப் ஹீரோவாக நடித்து இயக்கிய திரைப்படம் லவ் டுடே.

கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் நாளுக்கு நாள் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திரையரங்குகளில் கேட்கும் சிரிப்பலைகளை கதவு ஓரத்தில் நின்று ரசிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மக்கள் கொடுத்த அமோக வரவேற்பிற்கு பிரதீப் நன்றி கூறியுள்ளார்.

இதோ அவரது அறிக்கை பதிவு