Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரதீப் வெளியேற்றம் தீர விசாரித்து நடந்ததே.. விளக்கம் கொடுத்த கமல். பிரதீப் ஆண்டனி போட்ட பதிவு

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த வாரம் இந்த நிகழ்ச்சி இருந்து பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து கமல்ஹாசன் வெளியேற்றினார். இது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது. பலரும் பிரதீப்புக்கு நீதி வேண்டும் என கருத்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன்.

இந்த நிலையில் கமல் நேற்றைய எபிசோடில் பிரதீப் வெளியேற்றம் தீர விசாரித்து நடந்ததே, அதுவும் அவருடைய நல்லதுக்காக நடந்ததே என விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து பிரதீப் இது விஷயம் குறித்து கேம் ஓவர் என பதிவு செய்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.