தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனி தற்போது ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ள ஒரு படத்தை இயக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் பரவியது.
இந்த நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி லைவ் வீடியோ ஒன்றில் பிரதீப் ஆண்டனியின் காதலியை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
