Prabhu in intense exercise
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் அருகில் உள்ள ஒர்ச்சா என்ற இடத்தில் நடைபெற உள்ளது. இதற்காக மணிரத்னம், பிரகாஷ்ராஜ், கார்த்தி உள்ளிட்டோர் மத்திய பிரதேசம் சென்றுள்ளனர்.
இந்நிலையில் தற்போது பிரபுவுடன் நடிகர் ரகுமான் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நம்ப முடியாத அளவிற்கு நடிகர் பிரபு, உடல் எடை குறைந்து காணப்படுகிறார். பொன்னியின் செல்வன் படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்காக பிரபு இவ்வாறு மெனக்கெட்டு உடல் எடை குறைத்து தோற்றம் அளிப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பலரும் பிரபுவின் புதிய தோற்றத்திற்கு வியந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…
‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…