பிரபாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ படம் ஓடிடி.யில் ரிலீஸ்..
மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்த ‘தி ராஜா சாப்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ந் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற இப்படம் ரூ 400 கோடி ரூபாய் பட்ஜெட் உருவாக்கப்பட்டது. ஆனால், இப்படம் உலக அளவில் ரூ. 205 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபாஸ், நீண்ட நாட்களுக்கு பிறகு ஜாலியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹாரர் பேண்டசி ஜானரில் வெளியாகியுள்ள இப்படத்தில், தாய், தந்தை இல்லாமல் அனாதையாக பாட்டியின் அரவணைப்பில் இருக்கிறார். அந்த பாட்டி எப்போதுமே தொலைந்து போன கணவர் பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறார். பாட்டிக்கு எல்லா விஷயமும் மறந்து போனாலும், தன் கணவர் பற்றிய எந்த விஷயத்தையும் அவர் மறக்கவில்லை. பாட்டிக்காக அவரை தேடி பிரபாஸ் கிளம்புகிறார்.


