இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘கல்கி 2898- ஏடி’ (KALKI 2898-AD). இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.
மேலும், இதில் அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘கல்கி 2898- ஏடி’ (KALKI 2898-AD) திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் புதிய வடிவிலான துப்பாக்கியை படக்குழு வடிவமைப்பது குறித்தும் அதன் தயாரிப்பு குறித்தும் இந்த வீடியோ உருவாகியுள்ளது. மேலும், இந்த வீடியொவில் படக்குழு ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்தும் தெரிவித்துள்ளது.
The gun should not look like a gun at all. ????
Presenting '???????????????? ???????????????????????????? ???????????????????????????? ????: ????????-???????????????????????????????????? ???????? ????????????????': https://t.co/mFhYcJv1GA#Kalki2898AD #Prabhas @SrBachchan @ikamalhaasan @deepikapadukone @nagashwin7 @VyjayanthiFilms @Kalki2898AD pic.twitter.com/MnGRIi7RRR
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) December 30, 2023