பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் ராதே ஷியாம் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘ராதே ஷியாம்’. ராதா கிருஷ்ணகுமார் இயக்கி இருக்கும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
‘ராதே ஷியாம்’ படம் ஜனவரி 14-ந் தேதி ரிலீஸ் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாகவும் திரையரங்குகள் 50 சதவித இருக்கைகள் காரணமாகவும் ராதே ஷியாம் படம் வெளியாகாமல் தள்ளிப்போனது. இந்நிலையில் அப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி ராதே ஷியாம் திரைப்படம் வருகிற பிப்ரவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Prabhas In Radhe shyam Movie Release Date