Postponement of release of Sultan film
கொரோனாவால் தியேட்டர்கள் பல மாதங்களாக மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. ஆனாலும் தியேட்டர்களில் கூட்டம் குறைவாக இருப்பதால் காலை, பகல் காட்சிகளை ரத்து செய்து வருகிறார்கள். சில தியேட்டர்களை மூடியும் வைத்துள்ளனர்.
சூர்யாவின் சூரரைப் போற்று, விஜய் சேதுபதி நடித்த க.பெ. ரணசிங்கம், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின், வரலட்சுமியின் டேனி உள்ளிட்ட படங்கள் தியேட்டருக்கு பதிலாக ஓ.டி.டி.யில் வந்தன. ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படம் பொங்கலுக்கு ஓ.டி.டி.யில் வெளியாகிறது.
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தை பொங்கலுக்கு தியேட்டரில் வெளியிட திட்டமிட்டனர். ஆனால் மாஸ்டர், ஈஸ்வரன் படங்களுக்கு திரையரங்குகளை ஒதுக்கி விட்டதால் சுல்தான் படமும் ஓ.டி.டியில் வருகிறது என்று தகவல் பரவியது.
இதனை படக்குழுவினர் மறுத்தனர். சுல்தான் படத்தின் ரிலீசை ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது…
தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…
சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…