Popular actor and VJ Anandha Kannan passes away
90ஸ் கிட்ஸின் மனம் கவர்ந்த தொகுப்பாளராக விளங்கியவர் ஆனந்த கண்ணன். இவர், நகைச்சுவையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து இருந்தார். தமிழில் பிரபலமான சிந்துபாத் சீரியலில் நாயகனாக நடித்த இவர், சரோஜா, அதிசய உலகம் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்த கண்ணன், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையேயும், ரசிகர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆனந்த கண்ணன் மறைவுக்கு, இரங்கல் தெரிவித்து இயக்குனர் வெங்கட் பிரபு டுவிட்டரில், “சிறந்த நண்பன், சிறந்த மனிதன் தற்போது இல்லை. ஆழ்ந்த இரங்கல்கள்” என பதிவிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘சேயோன்’ அடுத்த வாரம் படப்பிடிப்பை தொடங்குகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து…
ரூ.2000 கோடி வசூலை நெருங்கி சாதனை படைத்து வரும் ‘துரந்தர் 2’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
75 நாட்களை கடந்து வெற்றிநடை போடும் ‘தாய் கிழவி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா…
“அவர் அரசியலுக்கு வந்தபோது பலரும் நம்பவில்லை… இன்று அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர்” என்று இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, முதல்வர் விஜயை…
கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான திலீப் ராஜ், தனது 47வது வயதில் மாரடைப்பால் திடீரென காலமானார். அதிகாலை நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத்…
Verappa Extended Lyric Video | Suriya's Karuppu | RJ Balaji | Sai Abhyankkar | Dream…